keerthy shanthanu video: நடிகர் சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர், இவர் எப்படியாவது முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார், இவர் தற்பொழுது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளது. இவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் தான் நடத்தும் டான் ஸ்டூடியோ வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.
இந்த நிலையில் தன்னுடைய மனைவி கிகி யை கௌதம் மேனன் ஸ்டைலில் வளைத்து வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளத்தில் பதிவேற்றி உள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக லைட்டா ஃபீல் பண்ணிட்டேன், முரட்டு சிங்கிள்ஸ் மன்னிக்கவும் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் சில கமெண்ட்ஸ்களும் பறக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
Lighta feel panniten 🤪🤪 morattu singles mannikkavum 🙏🏻😂#QuarantineParithabangal https://t.co/1RlUvBuV0A
— Shanthnu (@imKBRshanthnu) May 8, 2020