மொத்தமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகர் சாந்தனு.. வைரல் புகைப்படம்

Actor Shanthanu: சினிமாவை பொருத்தவரை ஏராளமான பிரபலங்கள் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் இருக்கும்பொழுது தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் சினிமாவில் பிரபலமடைந்து இருக்கின்றனர்.

என்னதான் வாரிசுகளாக சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்றால் தங்களது கடின உழைப்பை கொடுக்க வேண்டும் ஒரு சில வாரிசு பிரபலங்கள் அறிமுகமான சில படங்களிலேயே காணாமல் போனவர்களும் இருக்கின்றனர். சில பிரபலங்கள் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் நீடித்து வருகிறார்கள்.

தரமாக சம்பவம் செய்த பிக் பாஸ்.! பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு வைத்த ஆப்பு.. மாட்டிக்கொண்டு முழிக்கும் நிக்சன்

அப்படி பாக்கியராஜின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சாந்தனு. இயக்கனரும், நடிகருமான பாக்கியராஜ் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக சினிமாவில் கலக்கி வந்தார்.

actor shanthanu
actor shanthanu

இவர் தனது மகன் சாந்தனுவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது வரையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் நடித்திருந்தால் சொல்லும் அளவிற்கு இவருடைய படங்கள் ஹிட்டு அடிக்கவில்லை மேலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் உருவாக்காமல் இருந்து வருவதனால் விரைவில் ஹிட் படத்தினை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சாந்தனு இருந்து வருகிறார்.

சவாலில் ஜெயித்த முத்து வேல்.. நியாயம் கேட்க வீட்டுக்கு வந்த பாண்டியனை அசிங்கப்படுத்திய சக்திவேல்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்..

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சாந்தனு தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது தாடி, மீசை எடுத்த ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு புதிய லுக்கில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அழகாக இருப்பதாகவும், சூப்பர் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

actor shanthanu 1
actor shanthanu 1