தரமாக சம்பவம் செய்த பிக் பாஸ்.! பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு வைத்த ஆப்பு.. மாட்டிக்கொண்டு முழிக்கும் நிக்சன்

Bigg Boss season 7 Tamil today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தரமான சம்பவம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு செய்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே மாயா, பூர்ணிமா ஏஜென்ட் டீம் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை எனவே இதனால் பிக் பாஸ் வீடே கலவரம் பூமியாக இருந்து வருகிறது.

அதாவது வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த 5 போட்டியாளர்களையும் டார்கெட் செய்து கேப்டனான பூர்ணிமா அவர்கள் வந்து அடுத்த நாளே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் இவர்களுக்கிடையே கடுவாக்குவாதம் நடைபெற இந்த வார கேப்டன் ஆனா மாயா மீண்டும் அர்ச்சனா, தினேஷ், விசித்ராவை டார்கெட் செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

சோசியல் மீடியாவை அலறவிடும் பிரதீப் விவகாரம்.! ஆண்டவரின் அதிரடி முடிவு..

எனவே இதனால் இவர்கள் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் மாயாவின் நடவடிக்கை மிகவும் தவறாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

சூனியக்காரி மாயா, பூர்ணிமாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏஜென்ட் டீம் ஆடிவரும் நிலையில் தொடர்ந்து சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அப்படி தற்பொழுது பிக் பாஸ் ஓவராக ஆட்டம் போட்டு வந்த ஏஜென்ட் டீமுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நைட்டுக்கு மட்டும் மாயா வேண்டுமா ப்ராவோ.. கொச்சையாக பேசும் பூர்ணிமா.!

அதாவது தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ரவீனா இந்த வீட்டில் பல்வேறு ஸ்டேட்மெண்டுகள் காட்டப்படும் அதை சொன்ன நபர் ஏன் அதை சொன்னார்கள் என்பதை விளக்க வேண்டும் என படிக்கிறார். அதில் அனைவரும் ஒவ்வொருவராக வந்து தங்களது ஸ்டேட்மெண்டுகளை கூற நிக்சன் வினுஷா பற்றி உருவ கேள்வி செய்திருந்ததும் அனைவருக்கும் தெரிய வருகிறது.

நான் தப்பான அடுத்ததில் சொல்லல நான் இந்த வீட்டில இதை சொல்லல உன் மூஞ்செல்லாம் அப்படி வச்சுக்கிட்டு இருக்காதீங்க பாத்தாலே செம கடுப்பாகுது என அர்ச்சனாவை எச்சரிக்கிறார். சத்தியமா நான் தப்பா மீனிங்ல பண்ணல அப்படி நினைச்சிருந்தா நான் சாரி என கூறுகிறார்.