களவாணி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.! புலம்பித் தள்ளிய வாரிசு நடிகர்.!

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகிய திரைப்படம் தான் களவாணி இந்த திரைப்படத்தில் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சாகருப்பு இளவரசு, ஆண்டனி என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.  இந்த திரைப்படத்தை ஏ சர்குணம் தான் இயக்கி இருந்தார். அதேபோல் படத்திற்கு குமரன் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தில் விமல் படிக்காமல் கலவாணி தனம் செய்வதுபோல் நடித்திருப்பார்.

அதேபோல் ஓவியா பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருப்பார் இவர்கள் இருவரும் கலாட்டா செய்து வருவார்கள் ஆனால் ஒரு காலகட்டத்தில் விமல் ஓவியாவை காதலிக்க ஆரம்பித்து விடுவார் பின்பு எப்படி இருவரும் இணைந்தார்கள் ஓவியாவின் அண்ணனை எப்படி சமாளித்தார் விமல் என்பதுதான் படத்தின் கதை. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அதிக லாபத்தை ஈட்டித் தந்தது, பாக்ஸ் ஆபீஸில் 5 கோடி முதல் 9 கோடி வரை வசூல் செய்தது. ஆனால் இந்த திரைப்படம் 1.5 கோடி முதல் 2.7 கோடி வரைதான் எடுக்கப்பட்டது. அப்படியே இருக்கும் வகையில் இவர்களுக்கு இரண்டு மடங்கு லாபத்தை கொடுத்த திரைப்படமும் இந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தை மிஸ் செய்துவிட்டோம் என பல வருடமாக புலம்பித் தள்ளுகிறார் வாரிசு நடிகர் அவர் வேறு யாருமில்லை பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் தான். இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலில் இயக்குனர் சற்குணம் பாக்கியராஜ் மகனிடம் கூறியுள்ளார். ஆனால் இந்த கதை கூறும் பொழுது பாக்யராஜ் அவர்கள் கதை குறித்து இதில் தலையிட்டு ஏதேதோ மாற்ற கூறியுள்ளார்.

சாந்தனு பாக்யராஜ் அவர்களின் கால் சீட் சரியாக அமையாததால் இந்த திரைப்படத்தை சாந்தனு உதறி தள்ளியுள்ளார் அதன் பிறகுதான் இந்த திரைப்படத்தின் கதையை விமலிடம் இயக்குனர் சற்குணம் கூறியுள்ளார் இந்த திரைப்படத்தின் கதை தனக்கு பொருத்தமாக இருந்ததால் உடனே விமல் கால்சீட் கொடுத்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார் படத்தில் நடித்து முடிந்ததும் திரைக்கு வந்ததும் ஹிட்டானது.

இந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு சாந்தனு புலம்பி தள்ளி உள்ளார். இப்படி பல நடிகர்கள் நடிக்க மறுத்து வேறொரு நடிகர்கள் நடித்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படங்கள் பல திரைப்படங்கள் இருக்கின்றன இவற்றில் அஜித் விஜய்யும் விதிவிலக்கல்ல அவர்களுக்கும் இதுபோல் பல திரைப்படங்கள் அமைந்துள்ளது.

shanthanu
shanthanu

Leave a Comment