I am a தமிழ் பேசும் indian, Hindi theriyadhu poda இந்திய அளவில் ட்ரெண்டாகும் யுவன் மற்றும் சாந்தனு கிகி யின் டி-ஷர்ட் புகைப்படம்.!!

Yuvan shankar raja,shanthanu and keerthy t- shirt trending photo: கடந்த ஒரு மாத காலமாக இந்தி திணிப்பு பிரச்சினை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. திமுக எம்பி கனிமொழி இடம் சென்னை விமான நிலையத்தில் சி ஐ எஸ் எஃப் அதிகாரி இந்தியராக இருந்துகொண்டு இந்தி தெரியாதா என கேள்வி எழுப்பி விவகாரம் சர்ச்சையை எழுப்பியது.

மேலும் அதுமட்டுமல்லாமல் ஆயுஷ் அமைச்சகம் அக்கூட்டத்தில் தமிழக மருத்துவர்களுக்கு இந்தி தெரியாததால் வெளியேற சொன்ன விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காவிரி நடுவர் மன்ற செயல்பாடு பிரச்சனையிலும் இந்தித்திணிப்பு எழுந்தது.

எனவே இந்த பிரச்சனைகளால்  தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள்  தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில்  I am a தமிழ் பேசும் indian என்று அச்சிடப்பட்ட டீசர்ட்டை  அணிந்துள்ளார். மேலும் அவருடன் மெட்ரோ பட நடிகர் சிரிஷ் ஹிந்தி தெரியாது போடா என்று அச்சிடப்பட்ட டிஷர்ட்டை அணிந்துள்ளார். அதுபோலவே சாந்தனு கிகியும் அணிந்துள்ளனர்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shanthanu-kiki
shanthanu-kiki

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment