பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் வேறு வழியில் இறங்கிய பாக்கியராஜின் மகன்..! இதுவாது தேறுமா..?

0
shanthanu
shanthanu

actor shanthanu music album: பொதுவாக திரைப்பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காவிட்டால் நடிகைகள் உடனே கையில் எடுப்பது போட்டோ ஷூட் தான். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள் ஆனால் நடிகர்கள் அது போன்று செய்ய இயலாது.

இதன் காரணத்தினால் யூடியூப் பேஸ்புக் போன்ற செயலிகளை பயன்படுத்தி தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களை கவர நினைக்கிறார்கள் அந்தவகையில் தற்போது பிரபல முன்னாள் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு ஒரு புதிய முறையை கையாண்டு வருகிறார்.

அதாவது அவர்கள் மியூசிக் ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார்களாம் இந்த ஆல்பத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆனது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இவ்வாறு வெளியிட்ட போஸ்டர் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சாந்தனு இதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதேபோல் தான் அவருடைய மனைவி கிகி விஜய் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான இவர்கள் இருவரும் ஏற்கனவே யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வந்தார்கள் இந்நிலையில் தற்போது மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட உள்ளார்கள்.

இவ்வாறு இந்த மியூசிக் ஆல்பத்தின் டைட்டில் ஆனது “எங்க போர டி” என்று வைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த மியூசிக் ஆல்பத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் அவர்கள் தான் இயக்கிய உள்ளார்களாம். ஆகையால் இந்த மியூசிக் ஆல்பத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாகி உள்ளது.

shanthanu
shanthanu