பரத் நடித்த காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அன்று மட்டும் நடித்திருந்தால் இன்று அவரின் ரேஞ்சே தனி..

0
kadhal-movie
kadhal-movie

2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல், இந்த திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் தான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் பாடல் இன்னும் பல ரசிகர்களின் பேவரட் பாடல் தான். இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆனால் அதிக வசூலை ஈட்டியது, அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதான பிலிம்பேர் விருதை 2004ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.

படத்தில் பரத் மோட்டார் மெக்கானிக்காக நடித்திருப்பார், பரத் தனது வேலையை தான் பார்த்து வருவார் ஆனால் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சந்தியா பரத் மீது காதல் கொள்கிறார், முதலில் பரத் இதனை ஏற்க மறுத்தாலும் பிறகு இருவரும் காதலில் விழுகிறார்கள்.

அதன்பிறகு சந்தியா வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் அதனால் பரத் மற்றும் சந்தியா இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர் பரத்தின் நண்பர் ஸ்டீபன். இருவரும் ஓடி விட்டதால் சந்தியா வீட்டிற்கு தெரியவர பிறகு இருவரையும் கண்டுபிடித்து சேர்த்து வைப்பதாக கூறி முருகனை மட்டும் அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்கிறார்கள்.

முருகன் பிறகு பைத்தியமாக தெருக்களில் அலைந்து திரிகிறான் ஆனால் சந்தியாவிற்கு அவர்கள் மறுமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பிறகு முருகன் என்ன ஆனார் சந்தியா அவரை சந்தித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

இந்த காதல் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது, முதன்முதலில் இந்த திரைப்படத்தில் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் தான் நடிக்க இருந்தாராம், இந்த தகவலை பாக்யராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு தான் இந்த கதை பரத்திடம் சென்றுள்ளது பரத் இந்த திரைப்படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.