நடிகர் சாந்தனு-கிகி வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு இப்படி ஒரு திறமையா.! குவியும் பாராட்டுக்கள்

0
shanthanu-tamil360newz
shanthanu-tamil360newz

உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ், இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது, இப்படி இருக்கும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர் அடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதேபோல் பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள், பல பிரபலங்கள் குடும்பங்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் புகைப்படத்தை வெளியிடுவது வீடியோக்களை வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு வீட்டிலேயே இருந்து கொண்டு கொஞ்சம் கொரோனா கொஞ்சம் காதல் என்ற குறும்படத்தை எழுதி இயக்கியுள்ளார், இந்த குறும்படத்தில் சாந்தனுவின் மனைவி  நடித்துள்ளார். இந்த குறும்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் பல பிரபலங்களும் இதற்கு வாழ்த்து கூறினார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் வீட்டில் பணிபுரியும் பெண்ணுடன் சாந்தனு மற்றும் அவரின் மனைவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர்தான் யுவஸ்ரீ இவர் எங்கள் வீட்டில் தங்கியிருந்து பணிபுரியும் பெண், இவர்தான் எங்கள் குறும்படத்தை ஒளிப்பதிவு செய்தார், அனைத்திலும் திறமையானவர்  அது மட்டுமில்லாமல் எல்லா இடத்திலேயும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்களை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை உலகத்துக்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்தநிலையில் பணிப்பெண்ணுக்கு இருக்கும் திறமையை வெளி உலகத்திற்கு காட்டிய சாந்தனு மற்றும் கீர்த்தி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.