இது மாதிரி படத்தை பார்க்க எங்க பணத்தை வீணாக்கனுமா..? ரசிகர்களின் கேள்விக்கு கூலாக பதில் அளித்த சாந்தனு..!

0
shanthanu
shanthanu

பாலிவுட் சினிமாவில் போல தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜின் மகன் சாந்தனுவும் தற்போது திரைப்படங்களில் மிக பிரபலமான நடிகராக வளர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நமது நடிகை அழகும் திறமையும் இருந்தாலும் சரி தற்போது வரை இதுவரை முக்கிய நட்சத்திரமாகவும் உச்ச நட்சத்திரமாகவும் பிரதிபலிக்க முடியவில்லை.  இந்நிலையில் அவர் நடித்த பல்வேறு திரைப்படங்களும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.

இந்நிலையில் அவர் தளபதி விஜயுடன் கூட மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் மாளவிகா ஆண்ட்ரியா ரம்யா கௌரி கிஷன் சாந்தனு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் நமது நடிகர் முருங்கைகாய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதுல்யா நடித்து இருந்தது மட்டுமில்லாமல் மேலும் ஆனந்தராஜ் மயில்சாமி மனோபாலா மொட்ட ராஜேந்திரன் யோகிபாபு ரேஷ்மா மதுமிதா என பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

அந்த வகையில் இத்திரைப்படம் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தில் ரொமான்டிக் மற்றும் காதல் ஆகிய இரண்டையும்  அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.  இந்நிலையில் வருகிற 10ஆம் தேதி இந்த படம் வெளியாவதைத் தொடர்ந்து புரோமோஷன் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.

shanthanu
shanthanu

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் பலவற்றையும் சமூக வலைதள பக்கத்தில் படங்கள் வெளிவருவது மட்டும் இல்லாமல். நடிகர் சாந்தனு இந்த திரைப்படத்தை பார்க்க வருபவர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாருங்கள் உங்கள் கவலையை மறப்பீர்கள்.

என்று கூறியது மட்டுமில்லாமல் இதனை பார்த்த ரசிகர் ஒருவர் பொழுதுபோக்கு படத்திற்காக நாங்கள் எங்களுடைய பணத்தை வீணாக்க வேண்டுமா என்று கமெண்ட் செய்திருந்தார்.  இதற்கு உடனே சாந்தனு அப்படி என்றால் வீணாக்க வேண்டாம் என்று கூலாக பதில் கொடுத்துள்ளார்.