baakiyalakshmi today promo video

செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

baakiyalakshmi today promo : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பரபரப்பை இன்னும் அதிகமாக்க எழில் வாழ்க்கையில் ஒரு புயலை வீச புதிய கேரக்டரை உள்ளே இழுத்தார்கள்.

அதேபோல் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என நிரூபிக்க செழியன் வாழ்க்கையில் சடுகுடு விளையாட மாலினி கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பாக்யா கேண்டினில் திடீர் சோதனை நடத்தினார்கள் உணவு கட்டுப்பாடு துறை.

லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

ஆனால் பாக்கியா சமையலில் எந்த குறையும் இல்லை அவர் நன்றாக சமைத்துள்ளார் குவாலிட்டியான உணவு செய்துள்ளார் என நிரூபித்து விட்டார். மற்றொரு பக்கம் கோபி ராதிகாவிடம் இதைக் கூற ராதிகா சந்தோசப்படுகிறார் எப்படியாவது பாக்கியா கேண்டின் இழுத்து மூடப்படும் என கோபி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. இப்படி ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் கணவர் உயிரோடு வந்துள்ளதால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

இப்படி பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெனியின் அப்பா செழியனிடம்  பேசுவதற்காக வர சொன்னார் செழியன் அவருக்காக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மாலினி வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

மாலினி செழியன் உடன் பேசிக் கொண்டிருப்பதை ஜெனியின் அப்பா பார்த்து விடுகிறார் உடனே மாலினி அவரிடம் நீங்க வருவதற்குள் பேசிவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்தேன் ஆனால் செழியன் தான்  விடவில்லை நைட் பேசிக்கலாம் செழியா வந்துடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார் இதனால் ஜெனியின் அப்பா செழியன்  மீது இன்னும் மிகுந்த கோபத்தை காட்டுகிறார்.

உடனே செழியன் அழுது கொண்டு தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து நடந்த அனைத்தையும் கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது செழியனை நிம்மதியாக வாழ விடாமல் புயல் போல் வீசி சென்றுள்ளார் மாலினி இது எங்க போய் முடியப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum today episode 13

நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் அர்ஜுன் கண்ணில் மண்ணை தூவி சரக்கு வண்டியை எடுத்து வந்த மேகனா.! பிரமித்து போய் நிற்கும் தமிழ்.. சபாஷ் சரியான அடி..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனி முதலாளிக்கு அனைத்து பார்சல்களையும் அனுப்புகிறார் அந்த சமயத்தில் அர்ஜூனின் மாமா ஆள் வைத்து ஒரு லாரியை திருடி சென்று விடுகிறார் இதனால் தமிழ் போலீஸ் உதவியுடன் அர்ஜுனை வந்து அரெஸ்ட் செய்ய வருகிறார் ஆனால் அர்ஜுன் தான் எடுத்தார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள்.

நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் வெளியே செல்கிறார் பிறகு யூனியன் ஆபீஸ்க்கு செல்கிறார் அங்கு இரண்டு முதலாளிகளுக்கு இடையே ஒரு பிரச்சனை டெலிவரி சொன்ன நேரத்தில் டெலிவரி செய்யாததால் பிரச்சனை ஏற்படுகிறது இதில் தமிழ் பஞ்சாயத்து பேச வரும்பொழுது நீங்களே ஒழுங்கா டெலிவரி பண்ண மாட்டீங்க நீங்க எல்லாம் எனக்கு அறிவுரை சொல்றீங்களா என தமிழை அவமானப்படுத்துகிறார்கள்.

சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? கடைசியில் சூப்பர் ஸ்டாருக்கு தெரிந்த உண்மை

அடுத்த காட்சியில் கம்பெனிக்கு மேகனா வருகிறார் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார்கள் உடனே மேகனா மினிஸ்டருக்கு கால் பண்ணி எங்களுக்கு ஒருவன் தொல்லை கொடுத்து வருகிறான் என்பதை கூறுகிறார் உடனே என்னுடைய முழு சப்போர்ட்டும் உங்களுக்கு இருக்கிறது உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் இங்கிருந்து செய்கிறேன் என மினிஸ்டர் கூறி விடுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது தமிழை ஆடர் கொடுத்த முதலாளி கூப்பிட்டு திட்டிக் கொண்டிருக்கிறார் கரெக்ட் நேரத்துக்கு டெலிவரி பண்ண வில்லை என்றால் உங்களுக்கு பிளாக் மார்க் தான் உங்களுக்கு ஆர்டர் யாருமே கொடுக்க போவதில்லை என்பது போல் மிரட்டுகிறார் உடனே அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஓடி வந்து புதிதாக ஒரு கண்டெய்னர் வந்துள்ளது என பேசுகிறார்.

2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகைகள்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாடல் அழகி….

அப்பொழுது நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் மேகனா கண்டெய்னர் லாரியை ஒட்டிக்கொண்டு வருகிறார் லாரியில் இருந்து கீழே இறங்குகிறார் அப்பொழுது தமிழ் பிரமித்து போய் நிற்கிறார். மேகனா எப்படி லாரியை  எடுத்து வந்தார் என்பது நாளைய எபிசோடில் தெரியவரும். அர்ஜுனுக்கு ஆப்பு வைத்துள்ளாரா அல்லது கண்டெய்னரை மட்டும் எடுத்து வந்துள்ளார மேகனா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.