நீதி வென்றதா? சூழ்ச்சி விழ்ந்ததா? காரசாரமாக நடைபெற்ற கோர்ட் டாஸ்க்

Bigg Boss season 7 Tamil today promo: பிக் பாஸ் சீசன் 7 பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. அதாவது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியுள்ளனர்.

எனவே இதனால் கமல் மற்றும் பிக் பாஸ் நடப்பவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சூனியக்காரி மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீம் தொடர்ந்து அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகிய மூன்று பேரையும் தொடர்ந்து டார்கெட் செய்து சண்டை போட்டு வந்தனர்.

மொத்த சொத்தையும் மாத்தி எழுதி ராகினி கையெழுத்து போடுவதற்கு முன்பு தடுத்த நிறுத்திய தமிழ்.! உண்மையை நிரூபிப்பாரா..

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தனது பாயிண்டுகளை சரியாக எடுத்துச் சொல்லும் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் டைட்டில் வின்னர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் அர்ச்சனாவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதனை தொடர்ந்து பிக்பாஸ் கடுமையான டாஸ்க்குகளை வைத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று சிலர் சொன்ன ஸ்டேட்மெண்ட்கள் திரையில் காட்டப்பட்டது அதில் நிக்சன், மாயா, பூர்ணிமா, ஐஷு, ஜோவிகா போன்றவர்களின் உண்மையான முகம் வெட்ட வெளிச்சமானது. எனவே இதனால் ஐஷு விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டு அவருடன் இணைந்துள்ளார்கள்.

துரதிஷ்டவசமாக கமல் நடிக்க மறுத்து வேறொரு நடிகர் நடித்து கோடி கணக்கில் வசூல் செய்த 5 திரைப்படம்.!

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் BB COURT நடைபெற உள்ளது அதில் அனைவரும் தங்களுக்கு இருக்கும் வழக்கு குறித்து கூறுகின்றனர். அதில் விசித்ரா கேப்டன் பதவியை அவங்க மிஸ் யூஸ் பண்றாங்க என மாயாவை கூறுகிறார்.

கேப்டனா என் பதவியை அவங்க செய்ய விட மாட்டங்குறாங்க என சொல்கிறார் இவ்வாறு இதனால் போட்டியாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெறுகிறது. கானா பாலா விசித்ரா என்றும் ஜோவிகா அர்ச்சனா எனவும் தினேஷ் மாயா எனவும் கூறுகின்றனர்.

இதனை அடுத்து வாதாடும் இடத்தில் பூர்ணிமா விஷ்ணு இவர்கள் வாதாடி கொள்கின்றனர் நடுவராக ரவீனா உள்ளார். இவ்வாறு இதன் முடிவில் நீதி வென்றதா? சூழ்ச்சி விழ்ந்ததா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.