துரதிஷ்டவசமாக கமல் நடிக்க மறுத்து வேறொரு நடிகர் நடித்து கோடி கணக்கில் வசூல் செய்த 5 திரைப்படம்.!

kamal haasan missed 6 movies : சினிமாவைப் பொறுத்தவரை பல முன்னணி நடிகர்கள் பல மெகா ஹிட் திரைப்படத்தை தவற விட்டுள்ளார்கள். அந்த வகையில் கமலஹாசன் பல திரைப்படங்களில் நடிக்க மறுத்து வேறொரு நடிகர் நடித்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது அந்த வகையில் ஆறு திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.

முதல்வன் : முதல்வன் திரைப்படத்தின் கதையை முதன் முதலில் சங்கர் அவர்கள் கமலஹாசனை மனதில் வைத்து தான் எழுதியுள்ளார் ஆனால் அந்த சமயத்தில் கமலஹாசன் அவர்கள் ஹேராம் திரைப்படத்தில் கமிட்டானதால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு தான் சங்கர் இந்த திரைப்படத்தை பத்து மாதங்கள் தள்ளி வைத்தார் அது மட்டும் இல்லாமல் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் மற்றும் விஜய் அவர்களிடம் சங்கர் கேட்டுள்ளார் அவர்களாலும் நடிக்க முடியாமல் போன பிறகு தான் அர்ஜுன் அவர்கள் முதல்வன் திரைப்படத்தில் நடித்தார்.

அட நம்ம செல்லத்தையும் விட்டு வைக்காமல் ரூமுக்கு அழைத்த வாரிசு நடிகர்.? பட வாய்ப்பு வராததற்கு காரணம் இதுதானா..?

ஜென்டில்மேன்: முதல்வன் திரைப்படத்திற்கு முன்பே சங்கர் அவர்கள் ஜென்டில்மேன் கதையை கமலஹாசன் அவர்களிடம் கூறியுள்ளார் ஆனால் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் நடிக்க முடியாமல் போனது ஏனென்றால் பல திரைப்படங்களில் அப்பொழுது கமிட்டாகி இருந்தார் கமலஹாசன் அதன் பிறகு தான் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் நடித்து மாபெரும் ஹிட் அடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது.

எந்திரன்: சங்கர் அவர்கள் இந்திரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் கமலஹாசன் மற்றும் பிரீத்தி ஜிந்தாவை அணுகியுள்ளார் முதலில் ஆரம்பிக்கலாம் என இருந்தார்கள் பிறகு பட்ஜெட் காரணமாக இந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் ஓரிரு வருடங்களுக்கு பிறகு ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் அவர்களை வைத்து இந்த திரைப்படத்தை முடித்தார்கள் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

தீவாளியில் மோதிக்கொண்ட விஜய், சூர்யா, தனுஷ்.! கல்லா கட்ட முடியாமல் தடுமாறிய தளபதி .!

Main Hoon Naa : நடன இயக்குனராக இருந்து திரைப்பட தயாரிப்பாளராக மாறிய பராக்கான், Main Hoon Naa திரைப்படத்தில் முக்கிய வில்லனாக கமலஹாசனை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் கமலஹாசன் அப்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்ததால் இந்த திரைப்படத்தை நிராகரித்து விட்டார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் 2: சஞ்சய் தத்தின் லகே ரஹோ முன்னா பாய் ரீமேக் ஆன வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் மீண்டும் நடிக்க இருந்தார், ஆனால் மீண்டும் இந்த திரைப்படம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுமா இல்லையா என்ற குழப்பத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் அதன் பிறகு இந்த திரைப்படம் நிறைவேறாமல் நின்றது.