தீவாளியில் மோதிக்கொண்ட விஜய், சூர்யா, தனுஷ்.! கல்லா கட்ட முடியாமல் தடுமாறிய தளபதி .!

Polladhavan, Vel, ATM Box office Collection : 2007 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகிய மூன்று பெரிய திரைப்படங்களில் வசூல் நிலவரத்தை இங்கே காணலாம், கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய மூவரின் திரைப்படம் ஒரே நாளில் நவம்பர் 8ஆம் தேதி வெளியானது இதில் யார் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது என்பதை இங்கே காணலாம்.

தளபதி விஜயின் திரைப்படமான அழகிய தமிழ் மகன் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 8ம் தேதி வெளியானது இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படம் வெளியாகி தமிழ்நாட்டில் 15 கோடி வசூல் செய்து இருந்ததாக கூறப்பட்டது. அதேபோல் இந்திய முழுவதும் 20 கோடியும் ஓவர்சீஸ் 8 கோடியும் உலகம் முழுவதும் 28 கோடி வரை வசூல் செய்து இருந்ததாக தகவல் வெளியானது.

வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படமே இத்தனை கோடி வசூலா.! 16 வருடத்திற்கு முன்பு இப்படி ஒரு சம்பவமா.!

ஆனால் அழகிய தமிழ் மகன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதற்குக் காரணம் இதற்கு முன்பு வெளியாகிய போக்கிரி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதே ஜானரில் அழகிய தமிழ் மகன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

அதேபோல் நடிகர் சூர்யா அவர்களுக்கு அதை நவம்பர் 8, 2007 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் வேல் இந்த திரைப்படம் தமிழகத்தில் 18.8 கோடி வரை வசூல் செய்திருந்ததாக கூறப்பட்டது அதேபோல் இந்திய முழுவதும் 21.5 கோடியும், ஓவர்சீஸ் 7 கோடி ரூபாயும் உலகம் முழுவதும் சூர்யாவின் வேல் திரைப்படம் 28.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் திரைப்படமாக கொண்டாடப்பட்டது.

விஜய், கமலை தொடர்ந்து டாப் ஸ்டார் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள எஸ் ஜே சூர்யா.! இது நடந்த நல்லாத்தான் இருக்கும்

அதேபோல் நவம்பர் 8ஆம் தேதி 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் பொல்லாதவன் இந்த திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதேபோல் தமிழகத்தில் 13.5 கோடியும், இந்திய அளவில் 15 கோடி ரூபாயும், ஓவர்சீஸ் 1.25 கோடி வசூல் செய்திருந்தது, உலகம் முழுவதும் மொத்தமாக 16.25 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்  திரைப்படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.