அசிங்கப்பட்டு நிற்கும் மாயா.! வீட்டுக்கு போறேன் எனக் கதறும் பூர்ணிமா.. ஏஜென்ட் டீமுக்கு வந்த ஆப்பு

Bigg Boss season 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது சூனியக்காரி மாயா பூர்ணிமாவின் ஆட்டம் இந்த வீட்டில் தாங்க இருக்கும் நிலையில் இவர்களுடன் சேர்ந்து கொண்டு ஏஜென்ட் டீமும் ஆட்டமாக ஆடி வருகின்றனர்.

இந்த வார கேப்டனான மாயா தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எதிராக பல செயல்களை செய்து வருவதனால் கேப்டனாக இருக்கும் தகுதி மாயாவிடம் இல்லை என கூறி வருகிறார்கள். சில நாட்களாக மாயா திமிரின் உச்சத்தில் இருந்து வந்தார் ஆனால் தற்பொழுது அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் வகையில் ஹவுஸ் மேட்ஸ்கள் சிலர் அவருடைய தப்பை கேட்டு வருகிறார்கள்.

குடித்துவிட்டு மாமியார் வீட்டில் அலப்பறை பண்ணும் முத்து.. பொறுத்து போகும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

எனவே இதனை பூர்ணிமா மாயாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படி தற்பொழுது கோர்ட்டு டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் மாயா பூர்ணிமா நேற்று இரண்டு வழக்குகளில் தோற்றனர். இதனை அடுத்து இன்றைய வழக்கில் மாயாவை தினேஷ், அர்ச்சனா, நிக்சன் மற்றும் விஷ்ணு கேள்வி கேட்க மாயா அமைதியாக உள்ளார்.

அதாவது பூர்ணிமா, மாயா இருவரும் நிக்சன் மாசு கேட்க உள்ளாடையை வைத்து காமெடி செய்ததை வைத்து இந்த வழக்கு நடைபெறுகிறது. அது காமெடிக்காக செய்ததாக மாயா கூற அதற்கு நிக்சன் இதை நான் பார்த்திருந்தால் அங்கே கேட்டு இருப்பேன் என கூறுகிறார்.

அந்த முரடன் உன்ன நல்லா வச்சிருக்கானா.. கோமதியிடம் வம்பு இழுத்த சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

இந்த வழக்கிற்கு ப்ராவோ ஜட்ஜாக ஆக உள்ளார். பிறகு பூர்ணிமா நான் இந்த வாரம் போறேன் என கூறுகிறார் இவ்வாறு இவர்கள் செய்த தவறுகள் வெளியில் வர உடனே ஏஜென்ட் டீமால் இதனை சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.