ஐஷூ விவகாரத்தில் சிக்கிய நிக்சன்.! உண்மைகளை வைத்து மிரட்டும் மணி.. விஷ்ணுவின் முடிவு என்ன?

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கிடையே கடுமையான விவாதங்கள் அரங்கேறி வருகிறது. அப்படி ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து நடந்து முடிந்த 6வது சீசன் வரையிலும் காதல் ஜோடிகள் இருந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த சீசனில் இதுவரையிலும் நடந்ததை விட வேறு மாதிரியான காதல் ஜோடி 7வது சீசனிலும் இருந்து வருகின்றனர். அதாவது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக ரவீனா-மணி மற்றும் ஐஷூ-நிக்சன் ஆகியோர்கள் உள்ளனர். ரவீனா-மணி ஒருபுறம் இருந்தாலும் ஐஷூ-நிக்சன் இவர்களுடைய சில்மிஷன் வேலைகள் தாங்க முடியவில்லை.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினியுடன் இணையும் மாஸ் முன்னணி நடிகர்.. தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்

ஏனென்றால் இருவரும் கண்ணாடி முன்பு முத்தம் கொடுத்துக் கொள்வது, ஒரே தட்டில் சாப்பிடுவது, மாறி மாறி ஊட்டி கொள்வது அனைவர் முன்பும் நிக்சன் ஐஷூவை தூக்கி செல்வது என ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே இதனால் ஐஷூவின் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நிக்சன் ரவீனா, மணியை குற்றம் சாட்டிய நிலையில் தற்பொழுது நடக்கும் கோர்ட்டு டாஸ்க்கில் நிக்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கான விவாதமும் நடைபெற்று உள்ளது. அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய 2வது ப்ரோமோவில் என்னுடைய கேஸ் என்னன்னா நிக்சன் மணி ரவீனாவோட வளர்ச்சிக்கு தடையா இருக்கான் என்று சொல்லி இருக்கான் ஐஷூவோட வளர்ச்சிக்கும் அவன் தடையா இருக்கான் என்பதை ஒத்துக்கணும் என மணி தனது வாதத்தை கூறுகிறார்.

13 வயதில் ஹீரோயின்.. வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினேன் – விஜயகாந்த் பட நடிகை சுகன்யா ஓபன் டாக்

இதற்கு பதில் அளிக்கும் நிக்சன் ரவீனாவ பாதுகாக்கணும் என்ற எண்ணத்துல இவரு ஒன்னு பண்றாருல அதுதான் நான் சொல்கிறேன் என கூற இதற்கு மணி உன்னால ஐஷூவோட கேம் அன்னைக்கு பாதிச்சிது என்கிட்ட சொல்லி இருக்கா என கூறி விவாதங்களை முடித்துவிட்டு வெளியில் வருகின்றனர்.

அப்பொழுது நிக்சன் எங்க ரெண்டு பேரோடையது வேறடா நான் அப்படி தான்டா இருப்பேன் என்று சொன்னீங்க நான் அப்படிதான் அவகிட்ட இருக்கனா என கேட்க அதற்கு ஐஷூ சொன்னது எல்லாத்தையும் நான் சொன்னனா எல்லாமே காலி நான் வாயை விட்டானா எல்லாமே காலி என மணி நிக்சனை எச்சரிக்கிறார். இவ்வாறு இவர்களுடைய வாதத்திற்கு விஷ்ணு தான் ஜட்ஜ் ஆக உள்ளார். எனவே அவர் என்ன முடிவு சொல்லியிருப்பார் என்பதை இன்றைய எபிசோடில் தெரிந்து கொள்ளலாம்.