13 வயதில் ஹீரோயின்.. வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினேன் – விஜயகாந்த் பட நடிகை சுகன்யா ஓபன் டாக்

Actress Sukanya : இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை சுகன்யா. முதலில் புது நெல்லு புது நாத்து படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு எம்.ஜி.ஆர் நகரில் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சின்ன கவுண்டர் படத்தில் தெய்வான கதாபாத்திரம் தான் அவரை பெரிய அளவில் தூக்கி விட்டது.

ஏனென்றால் இந்த படத்தில் விஜயகாந்த் சுகன்யா இடுப்பில் பம்பரம் விளையாடும் சீன் இப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது மேலும் இந்த படமும் அற்புதமாக இருந்தது. அதனை தொடர்ந்து சினிமா உலகில் இவர் ஒரு ரவுண்டு வந்தார் குறிப்பாக வருடத்திற்கு குறைந்தது 7, 8 படங்களில் நடித்தார்.

Thalaivar 171 : ஒரு தடவை பட்டதே போதும்.. ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த பிரபலம் – யார் தெரியுமா.?

இப்படி ஓடிக்கொண்டிருந்த சுகன்யா 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரும்பளவு படங்களில் நடிக்கவில்லை.. இந்த நிலையில் நடிகை சுகன்யா சின்ன கவுண்டர் படத்தில்  நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. முதன் முதலில் சின்ன கவுண்டர் படத்தின் மூலம் தான் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்தேன்.

விஜயகாந்த் அப்பொழுது பெரிய மாஸ் ஹீரோ அவர் ஒரு நல்ல மனிதர் என்றும், இயல்பாகவே எல்லோரிடமும் பழகுவார் சின்ன கவுண்டர் படத்தில் வரும் பம்பரம் காட்சி மிக பிரபலமானது என்றும், இந்த படத்தில் இயக்குனர் உதயகுமார் பம்பரக் காட்சிக்காக தன்னை பம்பரம் கற்றுக் கொள்ளும்படி கூறியதாகவும் தானும் இயக்குனர் கூறியபடி கற்றுக்கொண்டேன் அப்பொழுது தன்னிடம் வயிற்றில் பம்பரம் விடுவதை போன்ற காட்சி இருப்பதாக தெரிவித்தார்.

குடும்பம் படும் கஷ்டத்தை நினைத்து வேலைக்கு போகும் பிரபா.. போட்டோ சூட் நடத்த 3 கிலோ உடல் எடையை குறைக்கும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

தான் அதற்கு இதெல்லாம் அந்த இடத்தில் நடக்கிற காரியமா என கேட்டேன் கடைசியில் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை மிக அழகாக இயக்குனர் எடுத்தார் சின்ன கவுண்டர் படத்தின் இயக்குனர் அதில் ஒன்று ஆபாசமாக இருப்பது போல் எனக்கு ஒன்றும் தெரியவில்லை விட்டதாக பேட்டியில் கூறினார்.

மேலும் பேசிய அவர் 13 வயதில் பாதி படத்தினை நடித்து முடித்த பின் தான் எனக்கு தெரியும் நான் தான் கதாநாயகி என்று அதுவும் விஜயகாந்த் என் தொப்புளில் பம்பரம் காட்சியில் நடிக்க ரிகர்சல்  நடந்தது எனக்கு மூன்று அசிஸ்டண்ட் பம்பரம் ரிகர்சலுக்காக இருந்தார்கள். எனக்கு ரொம்ப பயமாக இருந்தது பண்ணவே மாட்டேன்னு சொல்லியும் அதில் நடித்தேன் என கூறினார்.