‘தலைவர் 171’ படத்தில் ரஜினியுடன் இணையும் மாஸ் முன்னணி நடிகர்.. தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்

Rajinikanth 171 Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய படங்கள் கலவை விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 70 வயதை கடந்த பிறகும் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

அப்படி கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 171வது படத்தில நடிக்க இருக்கிறார்.

13 வயதில் ஹீரோயின்.. வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினேன் – விஜயகாந்த் பட நடிகை சுகன்யா ஓபன் டாக்

தற்காலிகமாக இப்படத்திற்கு தலைவர் 171 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ரஜினிகாந்தின் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப பேட்டியில் லோகேஷ் கனகராஜ் ரஜினி சாரிடம் எனக்கு பிடித்தது வில்லன் கதாபாத்திரம் தான். அந்த படத்தில் எவ்ளோ காட்ட முடியுமோ அதை காட்டுவேன் என்று கூறியிருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து தலைவர் 171வது படத்தின் அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் சமீப காலங்களாக படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றது. எனவே கண்டிப்பாக தலைவர் 171 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalaivar 171 : ஒரு தடவை பட்டதே போதும்.. ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த பிரபலம் – யார் தெரியுமா.?

இந்நிலையில் ரஜினி 171வது படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.