அர்ச்சனாவுக்கு ஏபிசிடி கூட தெரியாது? விசித்ராவிடம் வாதாடும் பூர்ணிமா..

Bigg Boss season 7 Tamil today promo: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கோர்ட்டு டாஸ்க் நடைபெறும் நிலையில் இதில் யார் வேணாலும் யாருடைய மீது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தங்களுக்கு பிரச்சனை இருப்பவர்களிடம் அனைவரும் வழக்கு பதிவு செய்த நிலையில் தங்களுடைய கருத்தை முன் வைத்தனர்.

அப்படித்தான் வந்ததிலிருந்து அர்ச்சனாவை டார்கெட் செய்து வரும் சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீம் இந்த டாஸ்கிலும் அர்ச்சனாவை டார்கெட் செய்து பேசி உள்ளது. அதாவது இந்த வார கேப்டன் ஆனா மாயா ஸ்மால் பாஸ், பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை சரி செய்யாமல் மேலும் சண்டையை மூட்டி விட்டு வருகிறார்.

ஆண்டவரே என்ன ஜிப்பு போட மறந்துட்டீங்க.. பிந்து மாதவியுடன் இருக்கும் கமல் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்…

எனவே இந்த வாரம் கண்டிப்பாக மாயா, பூர்ணிமாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தாங்கள் செய்வது தவறு கண்டிப்பாக கமல் கேட்பார் என தெரிந்தும் சாரி கேட்டா எல்லாம் சரியா போயிடுச்சு என மாயா, பூர்ணிமா பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் விசித்ரா மீது பூர்ணிமா வழக்கு பதிவு செய்கிறார் அதில் பூர்ணிமா சமையலில் ஏபிசிடி கூட தெரியாத அர்ச்சனாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விசித்ரா கேம் விளையாடினார் என்றும் அர்ச்சனாவுக்காக அவர் எங்களை பழி வாங்கினார் என்றும் குற்றம் சாட்டினார்.

கமலிடம் சாரி சார் அவ்வளவுதான்.. இதுதான நம்ம வழக்கமே.! ஆணவத்தின் உச்சத்தில் மாயா, பூர்ணிமா

அப்பொழுது விசித்ரா இப்ப அர்ச்சனா கிட்ட பிரச்சனையா? அல்லது அவர்களுக்கு சமையல் தெரியாது என்று பிரச்சனையா? என்ற கேள்வி கேட்க விசித்ரா சமையல் தெரியாது என்பது இங்கு பிரச்சனை கிடையாது என்று கூறியவர். நான் எதற்காக உங்களை பழி வாங்க வேண்டும் என்று கேட்கிறார்.

ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களை அவர்கள்தான் பழி வாங்கினார்கள் என்று விசித்ரா கூறியதோடு இவங்க பண்றது அர்ச்சனாவை தனிப்பட்ட முறையில் பழி வாங்குகிறார்கள் எனவும் ஹவுஸ் மேட்ஸ்கள் மீது வீண்பழி போடுகிறார்கள் என வாதாடுகிறார்.