கமலிடம் சாரி சார் அவ்வளவுதான்.. இதுதான நம்ம வழக்கமே.! ஆணவத்தின் உச்சத்தில் மாயா, பூர்ணிமா

Bigg Boss season 7 Tamil today promo 4: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து மாயா பூர்ணிமாவின் ஆட்டம் தாங்க முடியாமல் இருந்து வருவதனால் இவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பியாக வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, தினேஷ் மற்றும் அர்ச்சனாவிற்கு சுத்தமாக மரியாதை தராமல் எமோஷனலாக டேமேஜ் செய்து வரும் நிலையில் இவர்லாம் ஒரு பெண்ணா என நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு மாயா, பூர்ணிமா இவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களுடைய ஏஜென்ட் டீம் ஆட்டமாக ஆடி வருகின்றனர்.

தரவரிசை பட்டியலில் நம்பர் 1, நம்பர் 2 இடம்பிடிப்பது பெரிய விஷயம் அல்ல.. ரோகித் சர்மாவை பார்த்து கத்துக்கோங்க – அப்துல் ராசாக் பேச்சு

அந்த வகையில் இந்த வார கேப்டன் ஆன மாயாவிடம் வாங்கிய பொருட்களுக்கான பில்லை காமிக்குமாறு அர்ச்சனா, தினேஷ் மற்றும் விசித்ரா கேட்டிருந்தனர். ஆனால் தர முடியாது என மறுத்ததால் இவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிக் பாஸ் பில்லை வைத்து டாஸ் ஒன்றை நடத்தியதனால் ஸ்மால் பாஸ் வீட்டினர்களுக்கு சாதகமாக அமைந்தது.

இதனை வைத்து தற்பொழுது மீண்டும் பூர்ணிமா, மாயா தினேஷிடம் திமிராக வாக்குவாதம் செய்யும் இன்றைய 4வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் தினேஷ் அத்தனவாட்டி பில்லை கேட்டோமே ஏன் கொடுக்கல என கேட்க அதற்கு மாயா கமல் சார்ட கேட்டுக்கோங்க என சொல்லிவிட்டு கையை ஆட்டி அமைதியாக இருக்குமாறு திமிராக கூறுகிறார்.

அஜித், விஜய், கமல் என டாப் ஹீரோக்களை குறிவைத்து நடிக்கும் த்ரிஷா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

பதிலுக்கு தினேஷும் சைகையால் அமைதியா போங்க எனக் கூற இதற்கு பூர்ணிமா, மாயா நக்கலாக சிரிக்கின்றனர். எனவே தினேஷ் சிரிக்கிறதுல ஒரு அடுத்தமும் கிடையாது பில்லை கொடுத்திருந்தா என்ன வரப்போகுது என சொல்ல அதற்கு மீண்டும் மாயா கைத்தட்டி கமல் சார் கிட்ட கேளுங்க என சொல்கிறார்.

நம்ம மேல தப்பு இருக்கு நிறைய கமல் சார் கண்டிப்பாக கேப்பாரு என மாயா கூறுகிறார். இது மாதிரி ஏதாச்சும் பண்ணிட்டு வீக்கண்டில் கமல் சார் கேப்பாரு சாரி சார் என சொல்வோம் இதுதானே நம்மளுடைய வழக்கமே என பூர்ணிமா நக்கலாக சிரித்துக்கொண்டே கமல் பற்றி பேசுகிறார்.