தரவரிசை பட்டியலில் நம்பர் 1, நம்பர் 2 இடம்பிடிப்பது பெரிய விஷயம் அல்ல.. ரோகித் சர்மாவை பார்த்து கத்துக்கோங்க – அப்துல் ராசாக் பேச்சு

Rohit Sharma : இந்தியாவில் 13 வது உலககோப்பை போட்டி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது அரை இறுதி போட்டிக்கு மூன்று அணிகள் தகுதியான நிலையில் நான்காவது இடத்தை பிடிக்க நியூசிலாந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன.

அதிகபட்சமாக நான்காவது இடத்திற்கு வர நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு முன்னிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  அவர் சொன்னது.. நம்பர் ஒன் பகார் ஜமான் தான்..

அஜித், விஜய், கமல் என டாப் ஹீரோக்களை குறிவைத்து நடிக்கும் த்ரிஷா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

எல்லா நியூசிலாந்து வீரர்களும் அவரை புகழ்கிறார்கள் இப்படி விளையாடுவதற்கான கிளாஸ் எங்கள் கேப்டன் பாபர் அசாமுக்கு கிடையாது. அதோ ரோகித் சர்மாவை பாருங்கள் அவர் முதல் ஓவரில் 10 ரன்கள், இரண்டாவது ஓவரில் 15 ரன்கள் எடுக்க தயாராக இருக்கிறார்.

பாபர் அசாம் வித்தியாசமான விளையாட்டு பாணியை கொண்டவர் என்றாலும் கூட ரோகித் சர்மாவை அவர் பார்க்க வேண்டும் உலக தரம் வாய்ந்த வீரர்கள் எதிர் அணியிடமிருந்து ஆட்டத்தை எடுத்துக் செல்கிறார்கள் எங்கள் காலத்தில்  ஜெயசூர்யா சச்சின் டெண்டுல்கர் பாண்டிங் போன்றவர்கள் அப்படியானவர்களாக இருந்தார்கள்.

நீ எல்லாம் எனக்கு போட்டியா.. வா களத்துல மோதிப் பார்க்கலாம்.! இதான் சரியான நேரம் சிவகார்த்திகேயன் எனக்கு கட்டம் கட்டும் தனுஷ்..

இந்திய வீரர்களை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் தேசத்திற்காக விளையாடுகிறார்கள் மற்ற வீரர்கள் ரன் எடுக்கும் போது விராட் கோலி தான் இரண்டு ரன்களை எடுத்தது போல மகிழ்ச்சி அடைகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தார்கள்.

அதனால் வெற்றிகள் வந்தது தற்போது அப்படி இல்லை இதனால் நம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கேள்வி கேட்கிறோம் இது கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான் அதே சமயத்தில் ரோகித் சர்மாவின் அணி ஒற்றுமையாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதற்கு அவர்களுக்கான பாராட்டை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.