இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்… நிக்சனின் காதல் வலையில் சிக்கி சின்னா பின்னமாகும் தனது மகளுக்காக கதறும் ஐஷுவின் பெற்றோர்

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒரு மாதத்திற்கும் மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனின் காதல் ஜோடிகளாக நிக்சன், ஐஷு இருந்து வருகின்றனர். தற்பொழுது ஐஷு அம்மாவின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக பிக் பாஸ் வீட்டில் காதல் உருவாக்குவது மிகவும் சகஜமான ஒன்றுதான்.

முதல் சீசனில் இருந்து நடந்து முடிந்த 6வது சீசன் வரையும் பல காதல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்து இருப்பதனை பார்க்க முடிந்தது. அதேபோல் இந்த 7வது சீசனில் நிக்சன்-ஐஷு, ரவீனா-மணி ஆகிய இரண்டு காதல் சென்று கொண்டிருக்கின்றனர்.

தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் 5 திரைப்படங்கள்.. விஜய் உடன் மோதிய கைதி

ஆரம்ப காலகட்டத்தில் தனித்தனியாக விளையாடி வந்த நிக்சன்-ஐஷு கடந்த இரண்டு வாரங்களாக ஒன்றாகவே கேம் விளையாடி வருகின்றனர். எனவே இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பு இருந்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இருவரும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு முத்தம் கொடுத்து கொள்வது, ஒரே தட்டில் சாப்பிடுவது, ஊட்டி விட்டுக் கொள்வது, ஒரே பெட்டியில் படுத்துக்கொள்வது, டிரஸ்சை சரி பண்ணி விடுவது என பல சில்மிஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இப்பொழுது ஐஷுவின் பெற்றோர் போட்டிருக்கும் உருக்கமான பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த இயக்குனர் தான் வேணும்.. 5 ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த ரஜினி.! எந்த படத்தில் தெரியுமா.?

அதாவது அவரது தாய் வைஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்லாத்தையும் உணர்ந்து நீயாகவே இரு ஐஷு இந்த ஐஷு வேண்டாம் நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம் உண்மையான கண்கள் எது உண்மையான பொய் எது என நீ உணர்வாய் என நம்புகிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

BIGG BOSS AISHU 1
BIGG BOSS AISHU 1