தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் 5 திரைப்படங்கள்.. விஜய் உடன் மோதிய கைதி

Karthi : திரை உலகில் பண்டிகை நாளை குறி வைத்து படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கமான ஒன்றுதான்.. அதிலும் குறிப்பாக தீபாவளி என்றாலே பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது உண்டு.. அந்த வகையில் தீபாவளியன்று தமிழ் சினிமாவில் சில முக்கிய நடிகர்களின் படங்களோடு மோதிய கார்த்தியின் 5 திரைப்படங்களை பற்றி பார்ப்போம்..

1. ஆள் இன் ஆள் அழகுராஜா : கடந்த 2013 ஆம் ஆண்டு எம் ராஜா இயக்கத்தில் கார்த்தி காஜல், அகர்வால், சந்தானம் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நகைச்சுவை படமாகும்.. இந்த படம் வெளியான அதே நாளில் அஜித்தின் ஆரம்பமும் விஷாலின் பாண்டிய நாடு திரைப்படமும் வெளியாகியது. இந்த படங்களுக்கு இணையாக டஃப் கொடுக்க முடியவில்லை என்றாலும் ஆள் இன் ஆள் அழகுராஜா படமும் சுமாராக ஓடியது.

அந்த இயக்குனர் தான் வேணும்.. 5 ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த ரஜினி.! எந்த படத்தில் தெரியுமா.?

2.  காஷ்மோரா : இயக்குனர் கோகுல் இயக்கிய காஷ்மோரா திரைப்படமும் தனுஷின் கொடி படமும் ஒன்றாக வெளியானது.. இந்த இரண்டு திரைப்படங்களில் அதிகம் ரசிகர்களை கவர்ந்தது கொடி படம் தான் இருந்தாலும் காஷ்மோரா திரைப்படமும் ஒரு நகைச்சுவை கலந்த திகில் படமாக இருந்தது.

3. கைதி, பிகில் : கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அதிக வசூலை ஈட்டியது. அதேபோல் பிகில் திரைப்படமும் கைதிக்கு ஈடு இணையாக வசூலிலும், விமர்சன ரீதியாகவும் சிறந்து விளங்கியது இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினாக இருந்தாலும் வல்லியாக கலக்கிய டாப் 5 நடிகைகள்.! நீலாம்பரியாக ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணன்

4. சர்தார், பிரின்ஸ் : பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் வெளியாகி இரண்டு படமும் வெளியாகின இதில் சர்தார் 100 கோடி வசூல் செய்து பெரிய ஹிட் அடித்தது.

5. ஜப்பான், ஜிகர்தண்டா 2, ரெய்டு : கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் வருகின்ற தீபாவளி முன்னிட்டு ரிலீசாக இருக்கின்றன அந்த படத்துடன் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா 2 திரைப்படமும், விக்ரம் பிரபு நடித்துள்ள ரைய்டு படமும் ரிலீஸ் ஆகிருக்கின்றது.