ஹீரோயினாக இருந்தாலும் வல்லியாக கலக்கிய டாப் 5 நடிகைகள்.! நீலாம்பரியாக ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணன்

Tamil Actress: ஹீரோக்கள் அளவிற்கு ஹீரோயின்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. ஒரு சில நடிகைகள் ஹீரோயினாக நடித்திருந்தாலும் வில்லத்தனத்தில் கலக்கியவர்களும் இருக்கின்றனர். அப்படி வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

வரலட்சுமி: விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி படத்தில் வரலட்சுமி பேச்சி என்ற கேரக்டரில் நடித்து மிரட்டி இருந்தார். கதாநாயகியாக இவர் நடித்ததை விட இவருடைய வில்லத்தனம் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. அப்படி வில்லியாக 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

600 கோடி வசூல் செய்த ஜெயிலர் படத்தை கிழித்து தொங்கவிட்ட காமெடி நடிகர்.! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

திரிஷா: தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் திரிஷா ருத்ரா என்ற கேரக்டரில் நடித்து தனுஷையே கொலை செய்திருப்பார். இவருடைய நடிப்பும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இதன் மூலம் வில்லியாக 4வது இடத்தை பெற்றுள்ளார்.

ரீமா சென்: நயன்தாரா, சிம்பு இணைந்து நடித்த வல்லவன் படத்தில் ரீமா சென் கீதா என்ற படத்தில் வில்லத்தனத்தில் போலந்து கட்டினார். எனவே இதன் மூலம் வில்லியாக 3வது இடத்தை பிடித்துள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. வசூல் மன்னனாக கலக்கும் ரஜினி

திமிரு: விஷால் நடிப்பில் உருவான திமிரு படத்தில் வில்லியாக ஶ்ரீரியா ரெட்டி ஈஸ்வரி நடித்து ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது எனவே வில்லியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்: ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனை தற்பொழுது வரையிலும் யாராலும் மறக்க முடியாது ஏனென்றால் அந்த அளவிற்கு நீலாம்பரியாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் குடியேறினார். வில்லியாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் முதலிடத்தில் உள்ளார்.