பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. வசூல் மன்னனாக கலக்கும் ரஜினி

Top 5 Box Office Movies: சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. அப்படி ஒரு சில நடிகர்களின் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் பல கோடி வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற டாப் 5 படங்கள் குறித்து பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கல்கியின் நாவல் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படி பொன்னியின் செல்வன் 2, 342 கோடி வரை வசூல் செய்து 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

முத்துவேல், சக்திவேல் மேல் உள்ள கோபத்தில் கதிரை போட்டு அடித்த பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்றவர்களின் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் 435 கோடி வரை வசூல் செய்து 4வது இடத்தில் உள்ளது.

பொன்னியின் செல்வன் 1: மணிரத்தினம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.498 கோடி வரை வசூல் செய்து 3வது இடத்தில் உள்ளது.

ஜெயிலர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜெயிலர் படம் ரூ.605 கோடி வசூலுடன் 2வது இடத்தில் உள்ளது.

எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய அப்பத்தான்.. கடுங்கோபத்தில் குணசேகரன்.. கொதித்து எழுந்த கதிர்

2.0: சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் ரூ.723 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

விஜய் லியோ திரைப்படம் அதிக வசூல் செய்திருக்கும் நிலையில் விரைவில் லியோ படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி இந்த முதல் ஐந்து இடங்களில் எந்த இடத்தை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.