அந்த இயக்குனர் தான் வேணும்.. 5 ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த ரஜினி.! எந்த படத்தில் தெரியுமா.?

Rajini : தமிழ்நாட்டில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 40 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து தலைவர் 170 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படிப்பட்ட ரஜினி நடிப்பில் வெளியான கொடி பறக்குது திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் முடிந்து 36 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது இந்த நிலையில் இந்தப் படத்தில் நடந்த ஒரு சிறப்பான சம்பவத்தை பற்றி நாம் விலாவாரியாக பார்ப்போம்..

ஹீரோயினாக இருந்தாலும் வல்லியாக கலக்கிய டாப் 5 நடிகைகள்.! நீலாம்பரியாக ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணன்

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான கொடி பறக்குது திரைப்படத்தில் மணிவண்ணன்.. பாக்கியலட்சுமி, சுஜாதா, ஜனகராஜ் ஆகியவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு ஹம்சலோகா இசையமைத்திருந்தார். கொடி பறக்குது படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் 30 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார்.

இதை தெரிந்து கொண்ட பாரதிராஜா இது நம்மால் முடியுமா என யோசித்தாராம் உடனே ரஜினி பாரதிராஜாவின் சட்டை பையில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு இது மட்டும் போதும் மீதி பணத்தை படம் முடிந்தவுடன் வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டாராம்..

600 கோடி வசூல் செய்த ஜெயிலர் படத்தை கிழித்து தொங்கவிட்ட காமெடி நடிகர்.! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

பிறகு படம் வெளியாகி வெற்றி பெற்றது பாரதிராஜா 30 லட்சம் பணத்தை நடிகர்  ரஜினியிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளார் ஆனால் ரஜினியோ 20 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மீதி 10 லட்சத்தை இயக்குனர் பாரதிராஜாவிடம் திருப்பி கொடுத்து விட்டாராம். இந்த விஷயத்தை இயக்குனர் பாரதிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் நிகழ்ச்சியாக பேசி உள்ளார்.