rashmika

அரைகுறை ஆடையில் கோவா பீச்சில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா மந்தனா!! வைரலாகும் வீடியோ.

rashmika mandhana workout at beach in goa video: நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மேலும் அதை தொடர்ந்து இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதோடு ரசிகர்கள் கேள்வி கேட்கும் கேள்விக்கும் பதில் அளிப்பார்.

அப்படி பதில் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் இவர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் போது அங்கு இருக்கும் தலகாணி உரை மிகவும் அழகாக இருந்ததால் அதனை அங்கிருந்து திருடி விட்டு வந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் பரவி வந்தது.

அதனைதொடர்ந்து தற்போது லாக் டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இவர் சுற்றுலாவிற்காக கோவாவிற்கு சென்றுள்ளார். மேலும் சுற்றுலாவிற்கு சென்ற அவர் அங்கு இயற்கை அழகை ரசித்தது மட்டுமில்லாமல் பீச்சில் உடற்பயிற்சியும் செய்து வருகிறார். தற்போது அந்த வொர்க் அவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் ஆண்களுக்கு நிகராக ஒர்க்கவுட் செய்கிறார்.

முதல் முதலாக தான் இப்போதுதான் பீச்சில் ஒர்க்கவுட் செய்வதாகவும் அலையின் சத்தமும் கடலின் வாசனையும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதும் கடல் மணலில் தன்னுடைய கால் பதிவதும் ரொம்பவே அழகா இருக்கு என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CFv4jG1JRCr/?utm_source=ig_web_copy_link

sivakumar

எஸ்பிபி முதலில் பாடியது எனக்கு தான் எம்ஜிஆருக்கு அல்ல என வீடியோ வெளியிட்ட நடிகர் சிவகுமார்.!! வைரலாகும் வீடியோ.

actor sivakumar speak about spb video viral: பிரபல பாடகர் எஸ்பிபி மரணத்திற்கு தொடர்ந்து திரைஉலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். அதோடு கூடவே அவருடன் அவர்களுக்கு ஏற்பட்ட நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் எஸ்பிபி பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

எஸ்பிபி அவர்கள் முதலில் பாடியது எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் தான் என்றும் மேலும் சிலர் ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்ற பாடத்தில் படத்தில் இடம் பற்ற ‘இயற்கை  இளைய கன்னி’ என்ற பாடல் தான் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் நடிகர் சிவகுமார் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து எனது பால்குடம் படத்துக்காக எஸ்பிபி பாடிய ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் தான் அவருடைய முதல் பாடல் என சிவக்குமார் கூறியுள்ளார். அதாவது 1969 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் பால்குடம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் அடிமைப்பெண் சாந்தி நிலையங்களுக்கு பின்னர் தான் ரெக்கார்டிங் செய்யப்பட்டாலும் பால்குடம் முதலில் ரிலீஸ் ஆனதால் அவர் பாடிய முதல் பாடல் எனது படத்தில் தான் என பெருமையாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எஸ்பிபி உடன் இவருக்கு நிகழ்ந்த சில நிகழ்வுகளையும் வீடியோவில் சிவக்குமார் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ இந்த வீடியோ.

vijay actor

தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ!! எளிமையான மனுஷன் ப்பா.. இதோ வீடியோ.

actor vijay served food for his fans video: இளைய தளபதி விஜய் அவர்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விஜய்க்கு சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மிக பெரிய அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனதால் தற்போது மீண்டும் தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

ஆனால் படக்குழு மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் அவர் தற்போது எஸ்பிபி அவர்கள் இறந்ததை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் அவர்கள் நேரில் சென்று இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அங்கு கூட்டத்தில் மீடியா நபர் ஒருவரின் செருப்பு கீழே விழுந்துவிட்டது. அதனை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தானாகவே முன் வந்து அவரது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/ActorVijaySquad/status/1310914512027967488?s=20