டுவிட்டரில் இணைந்த நடிகை அனுஷ்கா. !! ஆரவாரமாக வரவேற்க்கும் ரசிகர்கள்…

0

actress anusha shetty joined in twitter:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தற்போது நடிகர் மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறா.ர் இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகி வருகிறது.

சைலன்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது இந்த திரைப்படத்தில் மைக்கேல், அஞ்சலி, அர்ஜுன் ரெட்டி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த சைலன்ஸ் திரைப்படம் முன்பே எடுத்து முடிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கள் படம் வெளிவராமல் தடைபட்டது. எனவே நாளை இந்த திரைப்படத்தை அமேசான் பிரைமில் ரிளீஸ் செய்கின்றனர். இந்தத் திரைப்படம்  சஸ்பென்ஸ், த்ரல்லர் கதையை கொண்ட திரைப்படம் ஆகும் என அனுஷ்கா கூறியுள்ளார்.

மேலும் இதுவரை அனுஷ்கா இதுமாதிரி கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை எனவும்  கூறியுள்ளார். இவர் இதுவரை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருந்துள்ளார். அவ்வப்போது அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். மேலும் அவரது ரசிகர்கள் இவரை டுவிட்டரில் இணைய சொல்லி கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்போது தான் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகை அனுஷ்கா.

ட்விட்டரில் தனது முதல் பதிவில் அனைவருக்கும் வணக்கம் என்றும் மேலும் அனைவரும் பாதுகாக்கவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன் எனவும் கூறி இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர். சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு இதை பின்பற்றுங்கள என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை வரவேற்கின்றனர்.

anushkashetty
anushkashetty