எஸ்பிபி முதலில் பாடியது எனக்கு தான் எம்ஜிஆருக்கு அல்ல என வீடியோ வெளியிட்ட நடிகர் சிவகுமார்.!! வைரலாகும் வீடியோ.

0

actor sivakumar speak about spb video viral: பிரபல பாடகர் எஸ்பிபி மரணத்திற்கு தொடர்ந்து திரைஉலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். அதோடு கூடவே அவருடன் அவர்களுக்கு ஏற்பட்ட நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் எஸ்பிபி பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

எஸ்பிபி அவர்கள் முதலில் பாடியது எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் தான் என்றும் மேலும் சிலர் ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்ற பாடத்தில் படத்தில் இடம் பற்ற ‘இயற்கை  இளைய கன்னி’ என்ற பாடல் தான் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் நடிகர் சிவகுமார் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து எனது பால்குடம் படத்துக்காக எஸ்பிபி பாடிய ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் தான் அவருடைய முதல் பாடல் என சிவக்குமார் கூறியுள்ளார். அதாவது 1969 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் பால்குடம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் அடிமைப்பெண் சாந்தி நிலையங்களுக்கு பின்னர் தான் ரெக்கார்டிங் செய்யப்பட்டாலும் பால்குடம் முதலில் ரிலீஸ் ஆனதால் அவர் பாடிய முதல் பாடல் எனது படத்தில் தான் என பெருமையாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் எஸ்பிபி உடன் இவருக்கு நிகழ்ந்த சில நிகழ்வுகளையும் வீடியோவில் சிவக்குமார் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ இந்த வீடியோ.