தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ!! எளிமையான மனுஷன் ப்பா.. இதோ வீடியோ.

0

actor vijay served food for his fans video: இளைய தளபதி விஜய் அவர்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விஜய்க்கு சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மிக பெரிய அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனதால் தற்போது மீண்டும் தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

ஆனால் படக்குழு மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் அவர் தற்போது எஸ்பிபி அவர்கள் இறந்ததை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் அவர்கள் நேரில் சென்று இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அங்கு கூட்டத்தில் மீடியா நபர் ஒருவரின் செருப்பு கீழே விழுந்துவிட்டது. அதனை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தானாகவே முன் வந்து அவரது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.