பின்னணி பாடகர் எஸ் பி பி மறைவுக்கு மருத்துவ மனையின் தவறே காரணம் எனக் கூறிய மருத்துவர். அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்.

0

hospital wrong treatment is the reason for spb death: பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவிற்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். இவரின் இறப்பு தமிழ் திரையுலகுக்கு மட்டும் அல்லாமல் மொத்த திரையுலகையே வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்த சூழ்நிலையில் எஸ்பிபி அவர்கள் இறப்பிற்கு தவறான சிகிச்சையே காரணம் என தற்போது கூறப்படுகிறது. அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் அவர்கள் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபோல தவறான சிகிச்சையால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்கள் இறந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

பிரபலங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அவர் வெளி உலகுக்கு வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் கூறுகையில் சாதாரணமாக இருப்பவர்கள் 24 மணிநேரமும் ஏசியில் இருந்தால் கிட்னி, நுரையீரல் பாதிப்பு, இதய பிரச்சனை போன்றவை அதிகமாக காணப்படும் என்றும் இதுவே உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் ஆக இருந்தால் நோயின் தாக்கம் வேகமாக அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் என் எம் ஷங்கர் எஸ்பிபி பற்றிக் கூறுகையில் தொண்டையில் சளி இருப்பதால் சாதாரணமாக மருத்துவமனைக்கு சென்றார் எஸ்பிபி. அவருக்கு ஸ்டீம் கொடுக்காமல் சூரிய வெளிச்சத்தை சிறிதளவு கூட காட்டாமல் முழு நேரமும் ஏசி அறையிலேயே அவரை வைத்தே நோயின் தன்மையை அதிகரித்ததே அந்த அலோபதி மருத்துவ முறை தான் என குற்றம்சாட்டி உள்ளார் மருத்துவர்

மருத்துவமனையில் உள்ள ஏசியால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உணவு நேரடியாக தொண்டையில் போவதற்கு அறுவை சிகிச்சை செய்து அவரை புண்ணாக்கி உள்ளார்கள். மேலும் இந்த அறுவை சிகிச்சை செய்ததால் அவர் உடல் நிலை சரியாகிரிந்தால் கூட அவரால் பாட முடிந்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். தற்ப்போது இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.