கௌதம் மேனன், வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி.

0

directors taken anthology movie title release:தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து திரைப்படம் எடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் ‘புத்தம் புது காலை’ என்ற திரைப்படம் ஒன்று அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தற்போது அதனை தொடர்ந்து மற்றொரு ஆந்தாலஜி திரைப்படம் வெளிவர உள்ளது. ‘பாவ கதைகள்’ என தலைப்பிட்ட இந்த திரைப்படத்தை வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் இணைந்து இயற்றியுள்ளனர்.

இந்த படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் நெட்பிளக்ஸ் ஓடிடியில் வெளிவர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் கௌதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ. எல் விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகிய நால்வரும் இயக்கி வருகின்றனர்.

இதுபோன்று தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து இயக்கிவரும் அந்தாலஜி திரைப்படங்கள் அனைத்தும் ஒடிடியில் ரிலீஸ் ஆகி வருவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.