நாங்க மூணு பேரு மட்டும் என்ன செஞ்சோம் எங்களுக்கு மட்டும் ஏன் SPB பாடுல என வருந்தும் முன்னணி நடிகர்கள்.!!

0

These three actors worried for legend singer spb didnt sing in their movies: பாடகர் எஸ்பிபி அவர்கள் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் சினிமாவிற்கு பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 16 மொழிகளில் பாடி சாதனை படைத்த ஒரு பாடகர் என்றால் அது எஸ்பிபி அவர்கள் மட்டும்தான். அதோடு மட்டுமல்லாமல் இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பத்ம விருது, தேசிய விருது போன்ற ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

இவருக்கென உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் இவர் நடிகர்களுக்கு ஏற்றார்போல் தனது குரலை மாற்றி பாட்டு பாடுவதில் வல்லவர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி மற்றும் கமல் ஹாசனுக்கு பாட்டு பாடும் போது அவர்களை போலவே பாடி இருப்பார்.

மேலும் இவர் தமிழில் ரஜினி, கமல் மட்டுமன்றி பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், மோகன் போன்ற பல ஹீரோக்களுக்கு தனது குரலை அர்ப்பணித்துள்ளார். இப்படி அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பாடியவர் என பெருமைக்குரியவர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் 50 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று அவற்றிலிருந்து மீண்டு பிறகு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன்,  விஜய் சேதுபதி மற்றும் விஷால் போன்ற மூன்று ஹீரோக்களுக்கும் ஒரு பாடல் கூட பாட வில்லை என அவர்கள் வருந்துகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதுமில்லை என அவர்கள் வருந்துகின்றனர்.