வரலக்ஷ்மி சரத்குமாரை பார்த்து ஆச்சரியப்படும் சக நடிகர், நடிகைகள்!! இதுக்காகத்தான்.

actress varalakshmi sarathkumar giving shock in her upcoming movie character:நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

வரலட்சுமி பெண்களுக்காக சேவ் சக்தி என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு  குரல் கொடுத்து வருகிறார்.இவர் பெண்களுக்காக போராடுபவர் என்பதில் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை.

நடிகை வரலட்சுமி தற்போது கலர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நைட் பிக்சர்ஸ் சார்பில் நிஜார் இயக்கத்தில் அஜி இடுகுலா  படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி தற்காப்பு கலைஞராக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதாக இயக்குனர் நிஜார் சிகரெட்டை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பலவிதமான மனிதர்களின் மனங்களைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளதால் கலர்ஸ் என பெயரிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை களத்தை கொண்டது. தியேட்டர் திறக்கப்பட்ட உடன் இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என படக்குழு கூறியுள்ளனர்.

Leave a Comment