salaar trailer

எரிகிற நெருப்பால.. இல்லனா அவனுங்க ரத்தத்தால.. KGF யை விட பல மடங்கு மிரட்டும் பிரபாஸின் சலார் ட்ரைலர்.!

salaar trailer : நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக மாஸ் காட்ட தொடங்கினார் பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து பிரபாஸ் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது ஆனால் இவர் நடிப்பில் வெளியாகிய சாகோ, ராதே ஷியம், ஆதி புருஷ் ஆகிய திரைப்படங்கள் மரண அடி வாங்கின.

அதனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அந்த திரைப்படங்கள்.  இந்த நிலையில் சலார் திரைப்படத்தை பிரபாஸ் பெரிதாக நம்பி இருக்கிறார் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரஷாந்த் நீல் தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரபாஸ் பிரஷாந்த் நீல் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் இந்த வான வேடிக்கை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து பிரிதிவிராஜ், சுருதிஹாசன் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள் ஆரம்பத்தில் இன்று அதிகாலை 10 42 மணிக்கு வெளியாக இருந்தது சலார் ட்ரைலர் ஆனால் திடீரென மதியம் 2 மணிக்கு தான் ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்திருந்தது.

ஆனாலும் குறித்த நேரத்தில் வெளியாகாமல் சில நிமிடங்கள் தாமதமாக தான் சலார் ட்ரெய்லர் வெளியானது காத்துக்கொண்டே இருந்த ரசிகர்களுக்கு இந்த ட்ரைலர் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஏனென்றால் கே ஜி எஃப் திரைப்படத்தை விட பல மடங்கு மிரட்டி உள்ளார் பிரஷாந்த் நீல் அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இருக்கிறது.

அதிலும் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டி விட்டுள்ளார் பிரபாஸ் இரண்டு நண்பர்கள் விரோதியாக மாறுகிறார்கள் இது தான் திரைப்படத்தின் கதை என ட்ரைலரிலேயே கூறிவிடுகிறார் பிரஷாந்த் நீல் இதனால் படம் முழுக்க ஆதகலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான காம்பேக்ட்   திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருந்த பிரபாஸுக்கு இந்த திரைப்படம் அதனைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ  ட்ரெய்லர்.

tamil actor side actor

கார்த்தி முதல் கௌதம் வாசுதேவ் மேனன் வரை துணை கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களாக ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..! சங்கர், சமுத்திரகனி, கவுண்டமணியும் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்களா..