விண்ணை தொடும் வசூல்.. இதோ ஃபைட் கிளப் அதிகாரபூர்வ வசூல் நிலவரம்…

fight club tamil movie box office collection : கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் பைட் கிளப்  இந்த திரைப்படத்தில் ஹீரோவாக உறியடி விஜயகுமார் நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக மோனிஷா மோகன் நடித்திருந்தார். ஏற்கனவே விஜயகுமார் உரியடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.

மேலும் பைட் கிளப் திரைப்படத்தில் கார்த்திகேயன் சந்தானம், சங்கரதாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்றது படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து இருந்தார் அதுமட்டுமில்லாமல் கோவிந்த் வசந்தா தான் இசையமைத்திருந்தார்.

2023ல் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டு பல்பு வாங்கிய திரைப்படங்கள்.. அட லிஸ்டில் இத்தனை திரைப்படங்களா..

இந்த திரைப்படம் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராக இருந்தது மேலும் இந்த திரைப்படத்தில் விக்கி மற்றும் அமீரின் அபூபக்கர் ஆகியோர் இணைந்து சண்டை காட்சிகளை அமைத்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் என்ற நிறுவனம் சார்பாக படத்தை வெளியிட்டார்.

இந்த திரைப்படத்தின் வெளியிட்டிற்க்கு முன்பே தொலைக்காட்சி உரிமம் மற்றும் இணைய வழி உரிமம் இரண்டும் இணைத்து ஐந்து கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிய இந்த திரைப்படம் சில மோசமான விமர்சனங்கள் இருந்தாலும் திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது .

விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை என வாழ்க்கை கொடுத்த பிரபலங்கள்… இமான் முதல் ஆதிக் வரை யார் யார் தெரியுமா.?

தமிழ்நாட்டில் மட்டும் பைட் கிளப் திரைப்படம் மூன்று நாட்களில் 5.75 ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

fight club box office collection
fight club box office collection