2023ல் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டு பல்பு வாங்கிய திரைப்படங்கள்.. அட லிஸ்டில் இத்தனை திரைப்படங்களா..

2023 Flop Tamil Movie: 2023ஆம் ஆண்டு அதிக பில்டப் கொடுக்கப்பட்டு கடைசியில் கலவை விமர்சனத்தை பெற்று அட்டர் பிளாப்பான தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். இந்த வருடம் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேபோல் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பல நடிகர்களின் திரைப்படங்கள் தோல்வியும் பெற்றுள்ளது.

மைக்கேல்: இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிப்ரவரி மாதம் திரையில் வெளியான படம் தான் மைக்கேல். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திரைக்கதை மொத்தமாக சொதப்பி இருந்ததால் தோல்வியை சந்தித்தது.

அகிலன்: பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது இப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண இயக்கியிருந்தார் இந்த படமும் அட்டர் பிளாப் ஆனது.

பிரபு மகளுக்கு வாழ்க்கை கொடுக்க இயக்குனர் ஆதிக் போட்ட கண்டிஷன்.. வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா.? உண்மையை உடைத்த பிரபலம்

கஸ்டடி: மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது  நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் கதையும் மோசமாக அமைந்தது.

ஆதிபுருஷ்: தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களை தந்து வரும் பிரபாஸ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஆதிபுருஷ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆனது பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான ஆதிபுருஷ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

சந்திரமுகி 2: சந்திரமுகி படத்தின் ஹிட்க்கு பிறகு பி வாசு இயக்கத்தில் இப்படத்தில் இரண்டாவது பாகம் 18 ஆண்டுகளுக்கு பின்பு வெளியிடப்பட்டது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆன படம் அட்டர் பிளாப் ஆனது.

இறைவன்: அகிலன் படத்தின் தோல்வினைத் தொடர்ந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்த நிலையில் ஆனால் கடைசியில் படம் மொக்கையாக அமைந்தது.

விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை என வாழ்க்கை கொடுத்த பிரபலங்கள்… இமான் முதல் ஆதிக் வரை யார் யார் தெரியுமா.?

கிக்: ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியான கிக் திரைப்படம் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் சொல்லும் அளவிற்கு கதை இல்லாத காரணத்தினால் தோல்வியை சந்தித்தது.

ஜப்பான்: தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவருடைய 25வது படமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான் வெளியானது இப்படம் கார்த்தியின் கேரியரிலேயே மிக மோசமான தோல்வி படமாக அமைந்தது.