thenral vanthu yennai thodum

கள்ளச்சாராயம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உடைத்த மக்கள்.! கண்மணியின் சூழ்ச்சி வலையில் சிக்கிய வெற்றி.! திசை திருப்பும் ராதாவின் கணவர்.. தென்றல் வந்து என்னை தொடும் இன்றைய எபிசோட்

thenral vanthu yennai thotom 24

கண்மணியின் சதி வலையை மீறி.. சுடர் பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்வாரா வெற்றி? தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் இன்றைய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுடர் தன்னுடைய மகள்தானா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெற்றி பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் ஆனால் அதனை நிறுத்த வேண்டும் என்பதற்காக கண்மணி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் கண்மணி என்ன பொய் சொன்னாலும் அறிவுகெட்ட வெற்றி யோசிக்காமல் தலையாட்டி பொம்மை போல் இருந்து வருகிறார். அந்த வகையில் அபி படித்த கன்ரிக்கு சென்று சுடர் எந்த மருத்துவமனையில் பிறந்திருப்பார் அதில் அப்பாவாக யாருடைய பெயர் இடம் பெற்று இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெற்றி கிளம்புகிறார்.

எனவே வெற்றினை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக வழுக்கி விழுந்தது போல் கண்மணி பெரிய ட்ராமா போட மருத்துவமனையில் சேர்கிறார்கள் அங்கு மருத்துவர் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறி அனுப்பிய நிலையில் இந்த நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சில இறந்து விடுகிறார்கள்.

எனவே கள்ளச்சாராயம் விற்பவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக கலெக்டரான அபி இடம் வெற்றி சண்டை போடுகிறார். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  நாங்கள் போராடுவோம் என கூற அபி போலீசார்கள் என அனைவரும் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தேடி வருகின்றனர்.

இந்த நேரத்தில் கண்மணி அனைவரையும் வெற்றியின் மேல் திசை திருப்புகிறார். அது இது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அபியின் வீட்டிற்கு சென்ற வெற்றி  கூப்பிடுங்கய்யா கலெக்டர என சத்தம் போட போலீஸார்கள் தடுத்து நிறுத்துகின்றனர். இதனை கேட்டு விட்டு அபி வெளியில் வந்து இப்ப உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். போராடி சரக்கு அடிச்ச மாதிரி என் மேல கேஸ் போடுவியா? உன்னுடைய சொந்த பகைக்காக இந்த விஷயத்தை பயன்படுத்துவியா என கேட்கிறார்.

அதற்கு அபி இந்த விஷயத்தை பொறுத்த வரையும் யாராயிருந்தாலும் நான் உடனே அரெஸ்ட் பண்ணுவேன் என சொல்கிறார். மறுபுறம் கண்மணி ஒருவரிடம் பணம் கொடுத்து நான் சொல்வதை சொன்னால் போதும் என சொல்ல அவரும் போலீசார் உதவியுடன் அபியை சந்தித்து எங்க ஏரியாவுல கலாச்சாராயம் விற்கிறது வெற்றிதானு எல்லாரும் தெள்ளத்தெளிவா சொல்றாங்க எனக் கூற அதற்கு அபியும் போலீசார்களிடம் வெற்றியை அரெஸ்ட் செய்யுமாறு சொல்கிறார் இதனால் வெற்றி  போலீசார்களால் அரெஸ்ட் செய்யப்படுகிறார்.

thenral vanthu yennai thodum

கண்மணி எந்த பித்தலாட்ட வேலை செய்தாலும் நம்பும் முட்டாள் வெற்றி.! நீயெல்லாம் கலெக்டரா இருந்து என்னத்த கிழிச்ச எனக் காரித் துப்பும் மக்கள்.. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோட்

thenral vanthu yennai thotum 78

எனக்கு அவ புருஷன் தான் வேணும் என அடம்பிடிக்கும் ஜூலி.! சுடரிடம் உன்னுடைய அம்மா யார் என கேட்கும் வெற்றி.. உண்மையைத் தெரிந்துக் கொண்டு அபியை சேருவாரா.?

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தென்றல் வந்து என்னை தொடும் இந்த சீரியலில் அபி கலெக்டராக இருந்து வரும் நிலையில் பல குற்றங்களுக்கு எதிராக போராடுகிறார்.

மேலும் குற்றவாளிகளும் இதனால் தண்டிக்கப்பட அனைவரும் அபிக்கு எதிரிகளாக மாறுகின்றனர் எனவே அபியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அபியை கடத்திக்கொண்டு கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள் நடுக்கடலில் அபியை தூக்கி வீசி விட இவர்களை பின் தொடர்ந்த வெற்றி அபியை உயிருடன் காப்பாற்றி விடுகிறார்.

ஒரு வாரமாக கடலில் அபியும் வெற்றியும் இருந்து வர பிறகு சிலரின் உதவியுடன் மீண்டும் கரைக்கு வந்து சேர்கிறார்கள். இவ்வாறு வெற்றி மற்றும் தனது அம்மா இருவரும் மீண்டும் வந்த நிலையில் இதனால் சுடர் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார். வெற்றிக்கு சுடரின் அம்மா யார் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் வந்துள்ளது.

தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெற்றியை பார்ப்பதற்காக சுடர் வருகிறார் இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ள பிறகு பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு விஜியையும் அம்மானு தான் கூப்பிடுற அபியையும் அம்மானு தான் கூப்பிடற உண்மையில் உன்னுடைய அம்மா யாரு என கேட்க அதற்கு சுடர் அம்மாவை பற்றி சொல்ல முடியாது என கூறி விடுகிறார்.

இந்த நேரத்தில் கண்மணி நடந்து வர கீழே தவறி விழப் பார்க்கிறார் உடனே வெற்றி அவரை பிடித்து விடுகிறார் பிறகு விஜி கண்மணியை உள்ளே அழைத்து செல்ல அவரிடம் நான் முடிவு பண்ணிட்டேன் வெற்றியை தான் கல்யாணம் பண்ணிப்பேன் இதனை எவனாலும் எவளாலும் தடுத்து நிறுத்த முடியாது என சவால் விடுகிறார் இதோடு அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.