arunvijay

செம்ம மாஸ் லுக்கில் சிம்பு மற்றும் அருண் விஜயின் போட்டோ ஷூட் வீடியோ!! அட சிம்புவா இது!! எப்படி மாறிட்டாரு பாருங்க.

actor arunvijay and simbu photo shout video: நடிகர் அருண் விஜய் தனது செகண்ட் இன்னிங்சில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் போன்ற படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அருண் விஜய் எப்போதுமே தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் பெரும் ஆர்வத்துடன் இருப்பார்.

இவர் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது ஒர்க்கவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதோடு தற்போது மிரட்டலான மீசை செம மாஸ் லுக்கீல் போட்டோ ஷூட் நடத்தி  உள்ளார். இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்பியதால் தற்போது அந்த வீடியோவை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட உள்ளார்.

அந்த வகையில் தற்போது அவரைத் தொடர்ந்து சிம்புவும் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் உடம்பை குறைப்பதற்காக வீட்டை சுத்தி ஓடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் இவர் 25 கிலோ உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு பிட்டாக இளமையாக மிகவும் ஸ்டைலாகவும் உள்ளார்.

சிம்பு அவர்கள் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு முன் சுசிந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரின் போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ வந்த வீடியோ.

parthiban

பார்த்திபன் வெளியிட்ட வீடியோவால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம். !! இதோ அந்த வீடியோ.

actor parthiban wants to direct puthiya pathai part 2 if simbu accept video: முன்னணி நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் புதிய பாதை. இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த படம் என்ற விருதும் வழங்கப்பட்டது.  அதோடு கூடவே மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா அவர்களுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு சிறந்த கதை ஆசிரியர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் புதிய பாதை திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  எடுப்பதைப் பற்றி நடிகர் பார்த்திபன் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பார்த்திபன் புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதாக இருந்தால் சிம்பு நடிக்க ஒத்துக் கொண்டாள் இந்த படம் எடுக்க தயார்.

அது மட்டுமல்லாமல் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் விரைவில் இது குறித்து செய்தி வெளியாகும் எனவும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உள்ளே வெளியே என்கின்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க சிம்பு மட்டுமே பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

singer-spb

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

SP_Charan

அஜித் தனது தந்தையின் மறைவுக்கு வராதது குறித்து பேசிய SP சரண்.!! வைரலாகும் வீடியோ.

SP charan speaks about ajith video:பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பல திரை பிரபலங்கள் பாடகர் எஸ்பிபி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரிலோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமோ தங்களது  வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தியது.

ஆனால் தல அஜித் அஜித் இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை, நேரிலும் வந்து பார்க்கவில்லை எனவே ரசிகர்கள் அஜித்தின் இந்த செயலைக் குறித்து விமர்சித்தனர். அஜித் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் பண்ணும்போது போட்டுக்க நல்ல சட்டை கூட இருக்காதாம். அவர் எஸ் பி பி யின் மகன் சரணின் சட்டைதான் அணிந்து கொள்வாராம்.

அஜித்தும் சரணும் பள்ளி பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாம் அதோடுமட்டுமல்லாமல் அஜித்தை முதன்முதலில் திரை உலகிற்கு  அறிமுகப்படுத்தியது எஸ்பிபி அவர்கள் தானாம். அஜித்தின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவரை நேரில் பார்க்கவில்லை என அவரை பலர் விமர்சித்து வருகின்றனர்.

சரண் பேசுகையில் அஜீத் வராதது குறித்து என்ன கூறியுள்ளார் என பாருங்கள். அதாவது அஜித் எனக்கு ஒரு சிறந்த நண்பர், அவர் வந்து அப்பாவைப் பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? இந்த மாதிரி சூழலில் வரனும் என்று அவசியமில்லை. இப்போது இதைப் பற்றி பேச வேண்டியதுமில்லை, என கூறி அஜித் மீது வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எஸ் பி சரண். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/tv/CFreqA2lnih/?utm_source=ig_web_copy_link

yaashika

ரவுடி பேபி பாடலுக்கு ஆளை மயக்கும் அழகில் யாஷிகா ஆனந்த்!! வைரலாகும் வீடியோ.

yashika ananadh rowdy baby song video:யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைதொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்.பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகனை காதலிக்கிறார் என்ற செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. மேலும் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகைகள் தங்களது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகின்றனர். அந்தவகையில் நடிகை யாஷிகாவும் தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிட்டு வருவார் .

நடிகை யாஷிகா ஆனந்த் மாரி திரைப்படத்தில் உள்ள ரவுடி பேபி என்ற பாடலுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/B9G7McxlS_b/?utm_source=ig_web_copy_link