நடிகர் அஜித்தை பற்றி ஆர்யா மனைவி நடிகை சாயிஷா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.!!

0

actress sayeesha, what she said about thala ajith : தல அஜித்திற்கு ரசிகர்கள் ஏராளம். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தல அஜித் பொதுவாகவே நேர்மறை எண்ணம் உடையவர்.  அவருடன் இருக்கும் நபர்களும் நேர்மறை எண்ணங்களை உடையவர்கள் மட்டுமே வைத்திருப்பார். மிகவும் எளிமையான மனிதர், தனது கடின உழைப்பால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது கூட ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அறிக்கையில் இவரது மேனேஜரை தவிர வேறு யாரும் இவருக்கு பிரதிநிதி இல்லை என கூறியிருந்தார். அஜித்தின் பெயரை பயன்படுத்தி இவரின் முன்னாள் நண்பர்கள் பண மோசடி செய்வதை அவர் அறிந்தார். எனவே  ரசிகர்கள் ஏமாற்றப்படுவதை கட்டுபடுத்துவதற்காகவே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இவரைப் பின்பற்றி நடிகர் ஜாக்கிசான் அவர்களும் ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டு இருந்தார். எனவே அஜித் பலருக்கு ரோல் மாடலாக தான் இதுவரை இருந்துள்ளார். இப்படி அவர் செய்த காரியங்கள் ஏராளம். எந்த வகையிலும் தன்னால் ஒருவர் பாதிப்படைய கூடாது  என்பதை கருத்தில் கொண்டு உள்ளவர் நடிகர் அஜித்.

ஆனால் எஸ்பிபி அவர்கள் இறந்ததற்கு அஜித் நேரில் வந்து இறங்கல் தெரிவிக்கவில்லை என அவரை நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என பலர் விமர்சித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா அவர்கள் அஜித் ஒரு சிறந்த மனிதர் மற்றும் சிறந்த நடிகரும் கூட எனக் கூறியுள்ளார். இவர் சொன்னதை அறிந்த அஜித் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருந்து வருகின்றனர். .