என் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியவர் இவர் தான்!! எனக் கூறி இயக்குனர் பாண்டி ராஜ் பெருமிதம்.

0

director pandiraj life changed because of him: பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.  இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பது பெருமைக்குரியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் அவர் இயக்கிய திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுத்தந்தது. பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான சசிகுமார் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இயக்குனர் பாண்டிராஜ் அவர்களும் சசிகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி மேலும் தனது வாழ்க்கையை தலைகீழாக திருப்பியது யார் என்று கேட்டால் அது சசிகுமார் தான் என வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தின் தயாரிப்பாளர் சசிக்குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பசங்க திரைப்படத்திற்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பட்டேலுடன் சசிகுமாரும் சேர்ந்து பெரும் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.