சின்மயி பதிவிட்ட ஒரே ஒரு டுவிட்!! பதறும் தொலைக்காட்சி.

0

chinmayi tweet : நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரது இறப்பிற்கு முக்கிய காரணம் போதை பொருள் என்பதால் அதனை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சினிமா உலகில் மிகப் பெரிய சர்ச்சையாக போய்க் கொண்டிருப்பது போதைப்பொருள்.

இந்த போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகைகள் பலர் சிக்கி கைதாகி வருகிறார்கள்.  மேலும் சில நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை குஷ்பு இந்த போதை பொருள் விவகாரத்தில் ஏன் பெண்களை மட்டும் விசாரணை செய்து வருகிறீர்கள். பெண்கள் மட்டும் தான் போதைப்பொருள் பயன்படுத்துவார்களா?, ஆண்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது இல்லையா? என கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரை தொடர்ந்து தற்போது பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகளை விசாரிப்பது பற்றி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் டெல்லியில் உள்ள போலீஸ் 160 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ஒரு கிலோ கஞ்சா கைப்பற்றியதாக வழக்கு பதிவு செய்து மீதமுள்ள 159 கிலோ கஞ்சாவை விற்பனை செய்த செய்தி ஒன்று முன்னணி நாளிதழில் வெளிவந்தது.

இந்த செய்தியை சுட்டிக்காட்டி பாடகி சின்மயி அவர்கள் இதைப்பற்றி எந்த தொலைக்காட்சியிலாவது யாராவது விவாதம் செய்தார்களா என கேள்வி எழுப்பி உளளார்.

நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினால் மட்டும் ஊடகங்கள் இதை பெரிதாக காட்டி விவாதம் செய்கின்றன. அதே தவறை காவல்துறையினர் செய்தால் கண்டு கொள்வதில்லை என சின்மயி டுவிட் செய்துள்ளார். தற்போது இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.