பார்த்திபன் வெளியிட்ட வீடியோவால் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம். !! இதோ அந்த வீடியோ.

0

actor parthiban wants to direct puthiya pathai part 2 if simbu accept video: முன்னணி நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் புதிய பாதை. இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த படம் என்ற விருதும் வழங்கப்பட்டது.  அதோடு கூடவே மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா அவர்களுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு சிறந்த கதை ஆசிரியர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் புதிய பாதை திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  எடுப்பதைப் பற்றி நடிகர் பார்த்திபன் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பார்த்திபன் புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதாக இருந்தால் சிம்பு நடிக்க ஒத்துக் கொண்டாள் இந்த படம் எடுக்க தயார்.

அது மட்டுமல்லாமல் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் விரைவில் இது குறித்து செய்தி வெளியாகும் எனவும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உள்ளே வெளியே என்கின்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க சிம்பு மட்டுமே பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.