இளம் ஹீரோவின் திருமணத்திற்காக அலையும் பிரபல ஹீரோயின்.!!

0

famous actress intermediate to her brothers in law marriage:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை. பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த குடும்பமும் பெரிய அளவுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்ட குடும்பமாம் பின்பு இந்த நடிகை அங்கேயே செட்டிலாகிவிட்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து  கொண்டிருக்கிறார்.

இந்த நடிகை தற்போது கூட பெண்களுக்காக ஒரு ஆன்லைன் பிசினஸ் ஒன்றை தொடங்க உள்ளாராம். அதுவும் மாடர்ன் டிரஸ் போடும் பெண்களுக்காக இந்த பிசினஸை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருப்பதாக சமீபத்தில்தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவரது கணவருக்கு ஒரு தம்பி உள்ளார் அவரும் ஹீரோ இவருக்கும் பிரபல தொழிலதிபர் குடும்பத்து டிசைனர் பொண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமணம் நின்றுவிட்டது. காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இந்த இளம் ஹீரோவுக்கும் பெரிய இடத்து தொழிலதிபர் மகளுக்கும் திருமணம் செய்து வைக்க இந்த அண்ணி நடிகை போராடி வருகிறாராம். தொழிலதிபர் குடும்பம் இவர்களின் குடும்பத்தை விட செல்வாக்காணதாம். மேலும் இது காதல் திருமணமா என்பது தெரியவில்லையாம். ஆனால் இளம் நடிகரோ அவரது அண்ணியை தான் பெருமளவில் நம்புகிறாராம்.

அண்ணி எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிடுவார் என்று அதனால் அண்ணி நடிகை இரண்டு குடும்பத்திடமும் தொடர்ந்து பேசி கொண்டு இருக்கிறாராம்.