செம்ம மாஸ் லுக்கில் சிம்பு மற்றும் அருண் விஜயின் போட்டோ ஷூட் வீடியோ!! அட சிம்புவா இது!! எப்படி மாறிட்டாரு பாருங்க.

0

actor arunvijay and simbu photo shout video: நடிகர் அருண் விஜய் தனது செகண்ட் இன்னிங்சில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் போன்ற படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அருண் விஜய் எப்போதுமே தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் பெரும் ஆர்வத்துடன் இருப்பார்.

இவர் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது ஒர்க்கவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதோடு தற்போது மிரட்டலான மீசை செம மாஸ் லுக்கீல் போட்டோ ஷூட் நடத்தி  உள்ளார். இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்பியதால் தற்போது அந்த வீடியோவை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட உள்ளார்.

அந்த வகையில் தற்போது அவரைத் தொடர்ந்து சிம்புவும் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் உடம்பை குறைப்பதற்காக வீட்டை சுத்தி ஓடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் இவர் 25 கிலோ உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு பிட்டாக இளமையாக மிகவும் ஸ்டைலாகவும் உள்ளார்.

சிம்பு அவர்கள் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு முன் சுசிந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரின் போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ வந்த வீடியோ.