பிரபல நடிகை ஒருவர் சத்தமில்லாமல் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவளிப்பது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது என கலக்கி வருகிறார்.!!

parinitha11-tamil360newz

A famous actress is quietly giving food for one lakh people every day to teach …

Read more

இணையதளத்தில் வைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் !! மேக்கிங் வீடியோ.

karthik-tamil360newz

karthik dial seitha en making video: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  விண்ணைதாண்டி வருவாயா. இத்திரைப்படத்தில் சிம்பு,  திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் விடிவி கணேஷ், சமந்தா, நாக சைதன்யா போன்றோர்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின்காரணமாக தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கௌதம் மேனன் சிம்பு, த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கு அவர் கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளார். இந்த குறும்படத்தின் டீஸார் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை அவர், அவர்களின் வீட்டில் இருந்தபடியே எடுத்துள்ளனர். எப்படி வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை எடுக்க முடியும் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில்  இருந்து உள்ளனர்.

ரசிகர்களின் இந்த குழப்பத்தில் போக்குவதற்காக தற்போது கௌதம் மேனன் மற்றும் சிம்பு எப்படி இதை சாத்தியப்படுத்த போகிறோம் என அவர்கள் பேசிக்  கொண்டிருக்கிறார்கள். இந்த குறும் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சாக்ஷி அகர்வாலின் வீடியோவை பார்த்து இப்படியே பண்ணிட்டு இருந்தா சீக்கிரம் மேல போயிடுவ எனக் கமெண்ட் செய்த ரசிகர்கள்.

Sakshi-Agarwal-tamil360newz

Fans who commented on the video of Sakshi Agarwal saying that she died soon: விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் இதற்கு முன் விசுவாசம்,  காலா போன்ற திரைப்படங்களில் நடித்திரந்தாலும் திரை உலகில் பிரபலமாகவில்லை. மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் படங்களில் தமன்னா, ஷாலினி பாண்டே, தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தும் வருகிறார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பிக்பாஸில் இருக்கும்போது கவினை காதலிப்பதாக கூறி  சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். மேலும் கவின் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறி வந்தார். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கியுளள சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் இப்படியே நீ ஒர்க்கவுட் பண்ணிட்டு இருந்த லாக் டவுன் முடியறதுக்கு முன்னாடி நீ மேல போயிடுவ என்று திட்டுகிறார். தற்போது இந்த வீடியோ இணையதளததில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

shakshi agarwal
shakshi agarwal

 

விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை ஸ்டைலாக பாடும் வெளிநாட்டு ரசிகை.!! வைரலாகும் வீடியோ.

master-tamil360newz

vijay kutty story song sing by a foreign lady video viral in social media: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். மேலும் கைதி, மாநகரம் போன்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  மாஸ்டர் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிநததும் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் ரிலீசாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் யூடியூப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிட் கொடுத்து உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் வரும் குட்டி ஸ்டோரி என்ற பாடல் உலகம் முழுவதும் பரவிவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் இந்த குட்டி ஸ்டோரி பாடலை மிகவும் ஸ்டைலாக பாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தனியார் மருத்துவமனைக்கு மனைவியுடன் வந்த தல அஜித்.!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

ajith-shalini-tamil360newz

Thala Ajith arrives at hospital with wife The video is viral on the website:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் அமர்க்களம், வாலி, முகவரி, காதல் கோட்டை, காதல் மன்னன், தீனா, மங்காத்தா, பில்லா, விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தீனா படத்தின் மூலம் ரசிகர்கள் அஜித்தை தல என செல்லமாக அழைத்து வந்தனர்.

தற்போது இவர் போனிகபூர் தயாரிக்கும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த  திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் பொதுவாக வெளியிடங்களுக்கு அதிகமாக செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதில்லை. இவர் இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் மருத்துவமனைக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்து சென்றுள்ளார். இவர் இந்த மருத்துவமனைக்கு யாரை பார்க்க வந்தார், எதற்காக வந்தார் என்ற எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இவர் மருத்துவமனைக்கு வந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.