விஜயுடன் மோத போகும் சிவகார்த்திகேயன்.!! வெல்வது யார்.?

Sivakarthikeyan who clashes with Vijay !! Who wins?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா போன்ற பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் யூடியூப் மற்றும் டிக்டாக்கில் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று தற்போது படக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க மருத்துவர்களை பற்றி எடுக்கப்பட்டதாகும்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் எடிட்டிங் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். ஏற்கனவே இப்படத்தை தீபாவளி அல்லது கிறிஸ்மஸ்க்கு வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்திருந்தது.

கொரோனாவால் விஜயின் மாஸ்டர் திரைப்படம்  வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு  தற்போது தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி ப்ளாப் ஆனதால் இந்த ஆண்டு சென்டிமென்ட் படி தீபாவளிக்கு டாக்டர் படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எந்த படம் ஹிட் ஆகும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

Leave a Comment