பிரபல நடிகை ஒருவர் சத்தமில்லாமல் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவளிப்பது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது என கலக்கி வருகிறார்.!!

0

A famous actress is quietly giving food for one lakh people every day to teach English to government school students: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நான்கு மாதமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் என பலரும் இரவு, பகல் பாராமல் கொரோனாவை தடுக்க உழைத்து வருகின்றனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலித் தொழிலாளிகள் என பலரும் பாதித்துள்ளனர். இவர்களுக்கு உதவிடும் செய உதவி செய்யும் வகையில் தொண்டு நிறுவனங்கள், திரைப் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் தொழிலதிபர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த ஊரடங்கினால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் போரடிக்காமல் இருப்பதற்காக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உளளனர்.

ஆனால் இவர்களை விட சிறந்த செயலை நடிகை பிரணிதா கடந்த சில மாதங்களாக சத்தம் இல்லாமல் செய்து வருகிறார். நடிகை பிரணிதா கார்த்திக் நடித்த சகுனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு அளித்து வருகிறார். மேலும் அது மட்டும் இல்லாமல் அரசு பள்ளியில் படித்து வரும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

pranitha-tamil360newz
pranitha-tamil360newz

நடிகை பிரணிதா, பிரணிதா பவுண்டேசன் என்ற அறக்கட்டளையை ஓராண்டிற்கு முன்பு தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கும் உதவி வருகிறார். தற்போது உள்ள நடிகைகள் எல்லாம் இந்த கொரோனாவை பயன்படுத்தி தனது ஹாட்டான புகைப்படங்களை பட வாய்ப்பிற்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நடிகை பிரணிதாவின் இந்த செயல் பாராட்டும் வண்ணமாக உள்ளது, தற்போது இந்த செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

pranitha1-tamil360newz
pranitha1-tamil360newz