உங்க அப்பாவின் காதலியா நடிப்பியா? என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிகில் இந்திரஜா.!!

0
inthiraja-tamil360newz
inthiraja-tamil360newz

you act as a Your dad’s girlfriend Asked by a fan to ‘Bigil Indraja’. she answered it: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு எனற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். மேலும் இதனை  அடிப்படையாக வைத்து திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, வந்த ராஜாவாதான் வருவேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவரைத் தொடர்ந்து இவர் குடும்பத்திலிருந்து இவரது மகள் தற்போது நடிக்க வந்துள்ளார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிகில் படத்தில் இவர் பாண்டியம்மாள் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் ரோபோ சங்கர் பிகில் படத்தை தொடர்ந்து தனது மகளுக்கு நிறைய படங்களில் இருந்து வாய்ப்பு வருகிறது என்று சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இந்திரஜாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பு என்ற விருது வழங்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அவ்வப்போது தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதில் அளித்து வருவார். அந்தவகையில் ரசிகர் ஒருவர் நீங்கள் உங்கள் அப்பாவிற்கு காதலியாக நடிக்க சொன்னா நடிப்பீர்களா என்று மோசமான கேள்வியைக் கேட்டிருந்தார். சிறிதும் கோபபடாமல் அந்த கேள்விக்கு பதிலளித்த இந்திரஜா அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன். அதுமட்டுமல்லாமல் நான் என் அப்பாவை காதலிக்கிறேன் அவ்வளவுதான் சிம்பிள் ப்ரோ எனக் கூறியுள்ளார்.

intrajabigil-tamil360newz
intrajabigil-tamil360newz