டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடித்த நயன்தாரா.!! லேடி சூப்பர்ஸ்டாரை பாராட்டும் படக்குழுவினர். !!

Nayanthara starred in fight scenes without a dub.!! The crew complimenting the Lady Superstar.!! லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போதெல்லாம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்கின்ற படத்தை நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனரான மிலந்த் ராவ் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு க்ரிஷ் அவர்கள் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர் டி ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் அவர்கள் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு 80% எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் 20 சதவீத படப்பிடிப்பே மீதம் உள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தொடர்ந்து இந்த படம் எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நெற்றிக்கண் என்கின்ற திரைப்படம் 2011இல் வெளியான கொரியன் படமான “ப்ளைண்ட்”என்ற படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.

nayanthara-tamil360newz
nayanthara-tamil360newz

Leave a Comment