நடிகை ஜோதிகாவை பாராட்டிய பிரபல முன்னணி நடிகை ராதிகா.!! காரணம் இதோ.

0
jo-radhika-tamil360newz
jo-radhika-tamil360newz

popular leading actress Radhika who praised actress Jodhika. Here is the reason: தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து 41 வயதிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 36வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் ஐபிஎஸ், ராட்சசி, ஜாக்பாட் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்கட்டி உள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ஜேஜே பிரட்ரிக் இயக்கத்தில் உருவாகிய பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்,  தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்திய திரை உலகில் ஓடிடி தளத்தில் முதன் முதலில் ரிலீஸாகும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த திரைப்படம் மே 29 ஆம் தேதி அமேசான் பிரைம்  தளத்தில் வெளியாக உள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலியின் மூலம் பத்திரிக்கையாளரை சந்தித்தார் நடிகை ஜோதிகா. பேட்டியின்போது இந்த படத்தின் கதை, தனது கதாபாத்திரத்தில் நடித்தது மற்றும் சந்திரமுகி 2 போன்றவற்றை பற்றி தமிழில் தெளிவாக பேட்டியளித்துள்ளார். மேலும் ஜோதிகாவின் பேட்டியானது எழுத்து வடிவிலும், வீடியோவாகவும் வெளியானது. இதில் அவர் முழுக்க முழுக்க தெளிவாக தமிழில் பேசியுள்ளார். எனவே இவரை பலரும் பாராட்டியுள்ளனர்.

ஜோதிகாவின் பேட்டி குறித்து ராதிகா சரத்குமார் தனது டுவிட்டரில் “நம்பிக்கையுடன் தெளிவாக தமிழ் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை அவருக்கு பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.